scorecardresearch

தெலுங்கானா அரசியல் : காங்கிரஸில் இருந்து விலகும் முக்கிய அரசியல் தலைவர்கள்

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை விரைவில் சந்திக்கலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

Telangana Politics Actress Vijayashanthi Cricketer Mohammad Azharuddin quit Congress
Telangana Politics Actress Vijayashanthi Cricketer Mohammad Azharuddin quit Congress

Telangana Politics Actress Vijayashanthi Cricketer Mohammad Azharuddin quit Congress : தெலுங்கானா அரசியலில் புது திருப்பம்… காங்கிரஸில் இருந்து விலகும் முக்கிய அரசியல் தலைவர்கள்தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை விஜயசாந்தி. பாஜகவில் இருந்த அவர் பின்பு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைந்து 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மேதக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்பு 2014ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியில் இருந்து விலகிய அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார். ஆனால் 2014ம் ஆண்டு மேதக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை கண்ட அவர் பின்பு அரசியலில் இருந்து சற்று விலகியே இருந்தார்.

மீண்டும் தற்போது அரசியலில் மக்கள் பணியாற்ற விரும்பும் விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அவருடைய கணவர் சீனிவாச பிரசாத்திடம் கேட்கும் போது “விஜயசாந்தி தற்போது திரைப்படங்களில் மிகவும் பிஸியாக இருக்கிறார். பாஜகவில் இணைவது குறித்து அவர் இன்னும் எந்த முடிவையும் எட்டவில்லை. ஆரம்பத்தில் அதே கட்சியில் இருந்ததால், மீண்டும் அவர் சேர்ந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் முகமது அசாருதீன். 2009ம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்த அவர் மொராதாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். பின்பு 2014ம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள டோங்க் மாதப்பூர் தொகுதியில் போட்டியிட அவருக்கு அங்கு தோல்வியே மிஞ்சியது. தற்போது ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக இருக்கும் அவர் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை விரைவில் சந்திக்கலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : Tamil Nadu news today live updates: சந்திரயான் 98 சதவீத வெற்றி என்னுடைய சொந்த கருத்தல்ல – இஸ்ரோ சிவன்

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Telangana politics actress vijayashanthi cricketer mohammad azharuddin quit congress