/tamil-ie/media/media_files/uploads/2017/10/PM-Narendra-Modi-750.jpg)
உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 100 அடி பிரம்மாண்ட சிலையுடன் கூடிய கோவில் கட்ட ஒருவர் முடிவு செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரான ஜே.பி சிங் என்பவர் தான் இந்த கோவிலை கட்டுகிறார். உத்திரபிரதேச மாநில பொதுப்பணியித்துறை நீர்பாசன கோட்டத்தில் பொறியாளராக பணியாற்றி ஜே.பி சிங், கடந்த 29-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது கவனிக்கத்தக்கது.
உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சர்தனா பகுதியில் தான் இந்த கோவில் கட்டப்படவுள்ளதது. மேலும், 100 அடி கொண்டி நரேந்திர மோடியின் பிரம்மாண்ட சிலையும் நிறுவபப்படவுள்ளது. இது குறித்து ஜே.பி சிங் கூறும்போது: இந்தியாவின் மீது நரேந்திர மோடி வைத்துள்ள பற்றே நான் இவ்வாறு செயல்படுவதற்கு காரணம். மேடியின் வளர்ச்சி திட்டங்களை நினைவு கூறும் வகையில் இந்த கோவிலை கட்ட முடிவு செய்தேன். இதற்காக மீரட்-கர்னல் நெடுஞ்சாலையில் 5 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறேன். நரேந்திர மோடியின் கோவிலை கட்டி முடிக்க 2 ஆண்டுகள் ஆகும். அக்டோபர் 23-ம் தேதி கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெறவுள்ளது என்று கூறினார்.
5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ள இந்த கோவிலுக்கு ரூ.10 கோடி வரை செலவு ஆகும் என்றும், இதற்காக மக்களிடம் இருந்து நன்கொடை பெற திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் ஜே.பி சிங்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் நிலையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்டுவது என்பது அவசியம் தானா என்ற கேள்வியும் எழத் தான் செய்கிறது. நல்லவேளையாக அரசு இதுபோன்ற நடவடிக்கை எடுக்காதவரை சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியது தான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.