டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு இலவச உணவு வழங்கும் சீக்கிய குருத்துவாரா

டெல்லி ஜந்தர் மந்தரில், கடந்த பல வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளுக்கு சீக்கிய குருத்துவாராவில் இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

By: Updated: August 2, 2017, 03:12:49 PM

டெல்லி ஜந்தர் மந்தரில், கடந்த பல வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளுக்கு சீக்கிய குருத்துவாராவில் இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தேசிய வங்கிகளில் வாங்கப்பட்ட விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்க்காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த ஜூலை மாதம் 16-ஆம் தேதி முதல், தமிழக விவசாயிகள் சுமார் 70 பேர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு இரண்டு வேளை பங்ளா சாஹிப் குருத்துவாராவில் இலவசமாக உணவு வழங்கப்படுகின்றன. ”போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு டெல்லியில் மொழியால் பல சிரமங்கள் ஏற்படும். அதனால், எங்கு சென்று உணவு சாப்பிடுவது என்பது அவர்களுக்கு தெரியாது. அதனால், குருத்துவாராவில் உணவு வழங்கும் இடத்தில் விவசாயிகளுக்கு இரண்டு வேளை இலவசமாக உணவு வழங்கப்படுகின்றன”, என டெல்லி சீக்கிய குருத்துவாரா நிர்வாகத்தின் தலைவர் மஞ்ஜித் சிங் தெரிவித்தார்.

 

அந்த உனவில், சப்பாத்தி, சப்ஜி, தால், கீர் ஆகியவை இடம்பெற்றிருக்கும். தமிழக விவசாயிகள் சப்பாத்தியை காட்டிலும் சாதம் சாப்பிடுவதையே பெரிதும் விரும்புவதையறிந்த குருத்துவாரா நிர்வாகம், அவர்களுக்கு சாதம் தயாரித்து வழங்கி வருகிறது. தமிழக விவசாயிகளில் கோரிக்கைகளுக்கும், போராட்டத்திலும் உங்களுக்கு உடன்பாடு என குருத்துவாரா நிர்வாகத்தை கேட்டதற்கு, அவர்களுடைய பணி கடவுளிடம் உதவியை எதிர்பார்ப்பவர்களுக்கு சேவை வழங்குவது மட்டுமே என்கின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:The bangla sahib gurdwara is feeding protesting tamil nadu farmers with a daily langar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X