Advertisment

புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்து வந்த பாதை!!

நாட்டின் முதல் குடிமகனாக தேர்வாகியிருக்கும் ராம்நாத் கோவிந்த், கடந்த 1945-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாதரான விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்து வந்த பாதை!!

நம்மில் பலருக்கும் இதுவரை அதிகம் பரிட்சயம் இல்லாத பெயர். அனைத்து தினசரிகளிலும் முதல் செய்தியாக நாளை இடம் பெறவிருக்கும் பெயர். நாட்டின் முதல் குடிமகனாக தேர்வாகியிருக்கும் ராம்நாத் கோவிந்த். யார் இந்த ராம்நாத் கோவிந்த்? இவர் கடந்து வந்த பாதை?

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் உள்ள தேராபூரில் கடந்த 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி ராம்நாத் கோவிந்த் பிறந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். ராம்நாத் கோவிந்த், கடந்த 1974-ஆம் ஆண்டு சவிதாவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கான்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்ற ராம்நாத் கோவிந்த், சட்டத்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தில் சட்ட ஆலோசகர் என டெல்லி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மொத்தம் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனிச் செயலாளராக பணியாற்றிய ராம்நாத் கோவிந்த், அதன்பிறகு பாஜவில் சேர்ந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் காதம்பூர் மக்களவை தொகுதியில் கடந்த 1991-ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த 1994-ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த், 2006-ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டு வரை பாஜக-வின் பாஜகவின் தலித் மற்றும் பழங்குடியினர் பிரிவின் தேசிய தலைவராகவும், அக் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் ராம்நாத் பதவி வகித்துள்ளார். லக்னோவில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் கொல்கத்தா ஐஐஎம் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இவர் பதவி வகித்துள்ளார். கடந்த 2002-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில், இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான நாடாளுமன்ற குழு, உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழு. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்கான நாடாளுமன்ற குழு, சமூக நீதிக்கான நாடாளுமன்ற குழு, சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற குழு ஆகியவற்றில் ராம் நாத் கோவிந்த் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிகார் மாநிலதின் 36-வது ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாதவராகவே இருந்த ராம்நாத், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சார்பில் 14-வது குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து, பிகார் மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த இவர், நாடு முழுவதும் சென்று தனக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரினார்.

இந்நிலையில், நாட்டின் 14-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு நடைபெற்ற வாக்குப்பதிவு எண்ணிக்கையின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில், 7,02,044 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். இவர் வருகிற 24-ம் தேதியன்று புதிய குடியரசுத் தலைவராக பொறுபேற்றுக் கொள்கிறார்.

President Of India Tamilnadu Assembly Ramnath Kovind Meira Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment