“குஜராத் தேர்தலுக்கு நன்றி, இன்று ஜி.எஸ்.டியில் நிறைய மாற்றங்கள் இருக்கும்”: பாஜகவை வாரிய ப.சிதம்பரம்

“இன்றைக்கு நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும்” என, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

GST, GST council meet, PM Narendra modi, Minister arun jaitley,P.chidambaram

“இன்றைக்கு (வெள்ளிக்கிழமை) நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும்” என, முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. கவுன்சிலியின் 23-வது கூட்டம் அசாம் மாநிலம் கௌஹாத்தியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், 28% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ள சுமார் 200 பொருட்களின் வரியை 18%=ஆக குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அவற்றுள், மரச்சாமான்கள், மின்சார ஸ்விட்ச், பிளாஸ்டிக் உபகரணங்கள், கழிவறை உபகரணங்கள், ஷாம்பூ உள்ளிட்ட பொருட்களும் அடக்கம் என கூறப்படுகிறது. அதேபோல், ஏசி உணவகத்திற்கான 18% வரி 12%-ஆக குறைக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், இந்த ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் ஜி.எஸ்.டி. குறித்து எழுப்பியுள்ள கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடத்தப்படும். அவர்கள் ஜி.எஸ்.டியின் வடிவமைப்பு மற்றும் நடைமுறைப்படுத்துதலில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டியுள்ளனர். அதனால், இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நடக்கும் விவாதத்தை தவிர்க்க முடியாது. பல்வேறு பொருட்களின் வரியை குறைக்க காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்துவார்கள்”, என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நடைபெறவுள்ள குஜராத் தேர்தலால் இந்த கூட்டத்தில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: They cannot avoid a debate in public domain or in the gst councilsays p chidhambaram

Next Story
மூச்சுவிடாத டெல்லி ‘நரகம்’: கைகொடுக்குமா ஆட்-ஈவன் ஃபார்முலா?Delhi Air Pollution, Delhi Smog ,Delhi Pollution, Delhi Pollution Level,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com