/tamil-ie/media/media_files/uploads/2017/09/yourstory-Cherukuri-Dolly-Shivani-1.jpg)
மற்ற குழந்தைகள் நடப்பதற்கும், பேசுவதற்கும் பழகிக்கொண்டிருந்த நேரத்தில் 5 வயது சிறுமி செருகுரி டாலி ஷிவானி, வில்லையும் அம்பையும் ஏந்திக்கொண்டு வில்வித்தை பழக கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள். இப்போது, சர்வதேச அளவில் புரியப்பட்ட பல சாதனைகளை ஷிவானி முறியடித்திருக்கிறாள். நிச்சயம் எதிர்காலத்தில் ஷிவானி வளர்ந்தபிறகு, அவரால் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் தங்கம் நிச்சயம்.
டாலி ஷிவானி குடும்பத்தினரும் வில்வித்தைக்கு பெயர் பெற்றவர்கள் தான். இவரது தந்தை சத்யநாராயணா, வில்வித்தை பயிற்சி அகாடமி நடத்தி வருகிறார். இவரது சகோதரர் செருகுரி லெனின் சர்வதேச அளவில் வில்வித்தை போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை பெற்றவர். கடந்த 2010-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் இவர் உயிரிழந்துவிட்டார்.
டாலி ஷிவானி, தனக்கு மூன்று வயது நிறைவடைவதற்கு முன்பே வில்லையும், அம்பையும் கையில் ஏந்திக்கொண்டு பயிற்சி பெற கிளம்பிவிடுவார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு, 5 மீட்டர் மற்றும் 7 மீட்டர் தொலைவு வில்வித்தையில் 200 புள்ளிகள் எடுத்து தேசிய சாதனை படைத்தார் டாலி ஷிவானி. அப்போது, டாலி ஷிவானி இந்தியாவின் இளம் வில்வித்தை வீராங்கனையாக அறிவிக்கப்பட்டார். இவரது இந்த சாதனை லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு டாலியின் மூத்த சகோதரி ஒரு விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, அவர் வாடகைத் தாய் மூலம் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த வில்வித்தை வீரர்களை விடவும் டாலி ஷிவானியின் வில்வித்தை சிறந்ததாகவும், மிகவும் ஒழுங்குடன் ஷிவானி பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் அவர் தந்தை சத்யநாராயணா தெரிவித்தார். “இந்த சிறிய வயதில் இவ்வளவு பெரிய சாதனைகளை செய்வது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. கடவுளின் கருணையால், அவள் இதவிட மிகப்பெரும் உயரத்திற்கு செல்வாள். மிகவும் தொழில்முறை ரீதியாக வில்வித்தையை அவள் விளையாடுகிறாள். எல்லோருடைய பரிந்துரைகளையும் கேட்டுக்கொள்கிறாள். நான் மற்றும் அவளது பயிற்சியாளர் சந்திரசேகர் வில்வித்தையை சொல்லிக் கொடுக்கும்போது நன்றாக கவனிக்கிறாள்.”, என தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.