இந்தியாவின் No.1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் கார் டிரைவரின் சம்பளம் குறித்த தகவலும், டிரைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது குறித்த தகவலும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, 100 பெரும் இந்திய பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். கடந்த மே மாதம் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 'உலகளாவிய மாற்றங்கள்' ஏற்படுத்தும் பணக்காரர்கள் பட்டியலிலும் அம்பானி முதல் இடத்தில் உள்ளார்.
செப்டம்பர் 2016-ல் நாட்டின் தொலைத் தொடர்பு சந்தையில் களமிறங்கிய அம்பானி, அதிவேக இன்டர்நெட் வசதியை குறைந்த விலைக்கு அறிமுகம் செய்தார். இத்திட்டத்தின் மூலம், ஆறு மாதத்தில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை அவர் கைப்பற்றினார். தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமீபத்திய தகவலின் படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.2,57,900 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. தெற்கு மும்பையின் அல்டாமவுன்ட் சாலையில் உள்ள முகேஷ் அம்பானியின் வீடு, உலகத்தின் மிக மதிப்பு வாய்ந்த குடியிருப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. 4,00,000 சதுர அடியில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.
இந்தளவிற்கு பெரும் கோடீஸ்வரராக விளங்கும் முகேஷ் அம்பானியின் கார் டிரைவரை தேர்ந்தெடுக்கும் ஒப்பந்தம் தனியார் நிறுவனங்களிடம் போடப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் சில டிரைவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கின்றன. பயிற்சிகள் முடிந்த பின், டிரைவர்களுக்கு சில தேர்வுகள் வைக்கப்படும். அதில், தேர்வாகும் டிரைவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும். அவர்களின் மாத வருமானம் ரூ.2 லட்சமாம்.