திருச்சி விமானம் விபத்து பகீர்: மோதியது தெரியாமல் விமானத்தை இயக்கிச் சென்ற விமானிகள்!

Tiruchi Air India Flight Accident: திருச்சியில் இன்று அதிகாலை 130 பயணிகளுடன் பறந்த விமானம் கட்டுப்பாட்டு கோபுரத்தில் உரசிச் சென்றது.

Tiruchi Air India Flight Accident : திருச்சியில் இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. 130 பயணிகளுடன் பறந்த விமானம் கட்டுப்பாட்டு கோபுரத்தில் உரசிச் சென்றது.

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் இருந்து அரபு நாடுகளில் ஒன்றான துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது.  இன்று (அக்டோபர் 12) அதிகாலை 1.20 மணிக்கு இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் போதிய உயரத்தில் பறக்கவில்லை.

Tiruchi Air India Flight Accident : திருச்சி விமான நிலையத்தில் உரசி சென்ற ஏர் இந்தியா விமானம் :

திடீரென விமானத்தின் கீழ் பாகம், விமான நிலையத்தின் சுற்றுச்சுவரின் மீது உரசியது.  தொடர்ந்து அருகில் இருந்த விமான கட்டுப்பாட்டு கோபுரத்தின் மீதும் உரசியபடி மேலே பறந்தது. எனினும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியாமலேயே விமான ஓட்டுனர் பயணத்தை தொடர்ந்தார்.

பின்னர், விமான நிலையத்தின் கண்டுரோல் அறை மூலமாக பைட்டுகளுக்கு விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு, விமான ஓட்டுநர் விமானம் சீராக இயங்குவதாக தெரிவித்தனர்.

ஆனால் தற்காப்பு காரணமாக மும்பை விமான நிலையத்திற்கு விமானம் திசைத் திருப்பப்பட்டது. அங்கு விபத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, சில பழுது வேலையும் பார்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த 130 பயணிகள் மற்றும் 6 விமான பணியின் குழு நபர்களும் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக விமானத்தை ஓட்டிச் சென்ற இரண்டு பைலட்டுகளிடமும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சியில் விமானம் விபத்துக்குள்ளான பகுதியை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இன்று காலை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ‘விமானத்தில் இருந்த 130 பயணிகளும் பத்திரமாக இருப்பதாக’ குறிப்பிட்டார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close