ஆதார் அட்டை இருந்தால் தான் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வழங்கப்படும் என்று தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே திருப்பதி லட்டு, தரிசன டிக்கெட் வழங்க வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பு பக்தர்களிடேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.