இன்று கடைசி நாள்: பான் – ஆதார் இணைப்பது எப்படி?

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்வதில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களையும் பெற முடியாமல் போகலாம்.

By: Updated: August 31, 2017, 06:25:49 PM

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. உங்களது பான் எண்ணை இணைக்கவில்லையெனில் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றி இன்றே இணைத்து விடுங்கள். அவ்வாறு இணைக்கவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்வதில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல், அரசின் பல்வேறு திட்டங்களை பெற முடியாமலும் போகலாம்.

நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு என்பது வரி செலுத்துவோருக்கு வருமான வரி துறையினர் அளிக்கும் 10 இலக்க எண் ஆகும். வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் கார்டு பெறலாம். பான் கார்டினை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தலாம்.

இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன். பான் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. வருமான வரித்துறை இணையதளத்தில் அதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

உங்களது பான் கார்டுக்கு “உயிர்” இருப்பதை உறுதி செய்வது எப்படி?

ஒரே நேரத்தில் பலரும் ஆதார் கார்டு எண்ணை பான் கார்டு எண்ணுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் இணையதளம் முடங்கியது. பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையை ஏற்று ஆகஸ்டு 31-ம் தேதி வரை (இன்று) கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், உங்களது பான் எண்ணை இணைக்கவில்லையெனில் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றி இன்றே இணைத்து விடுங்கள். அவ்வாறு இணைக்கவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்வதில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல், அரசின் பல்வேறு திட்டங்களை பெற முடியாமலும் போகலாம்.

இணைப்பதற்கான வழிமுறை:

** முதலில் வருமான வரித்துறையின் http://www.incometaxindiaefiling.gov.in இணைய பக்கத்தை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.

** அந்த பக்கத்தில் Link Aadhar என்பதை கிளிக் செய்ய வேண்டும். அபப்டி கிளிக் செய்தால் வேறு ஒரு பக்கத்திற்கு உங்களை அது எடுத்துச் செல்லும்.

** அதில் உங்களது பான் எண், ஆதார் எண் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், ஆதார் அடையாள அட்டையில் கொடுக்கப்பட்ட சரியான பெயரை டைப் செய்ய வேண்டும்.

** கேப்ட்சா குறியீடை அதில் உள்ளவாறே, அதற்கான இடத்தில் டைப் செய்ய வேண்டும். பின்னர் “Link Aadhar” எனும் பச்சை நிற பச்சை நிற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். சரியான சோதனைக்கு பின்னர், உங்களது இணைப்பு உறுதிசெய்யப்படும். உறுதி செய்யபப்ட்டதர்கான தகவல் செல்போனில் எஸ்எம்எஸ் மூலமாகவோ, அல்லது உங்களது இ-மெயில் முகவரிக்கு வருமான வரித்துறை மூலம் அனுப்பப்படும்.

செல்போன் மூலம் இணைக்கும் முறை:

செல்போனில் இருந்து எஸ்.எம்.எஸ் மூலம் இணைக்கும் வசதியை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, உங்கள் செல்போனில் UIDPAN என டைப் செய்து, ஒரு இடைவெளி விட்டு, முதலில் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின் ஓர் இடைவெளி விட்டு, பான் எண்ணையும் டைப் செய்ய வேண்டும். இதனை 56161 அல்லது 567678 ஆகிய எண்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பியும் இணைத்துக் கொள்ளலாம்.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது பான் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் உள்ள பிறந்த தேதி மற்றும் பாலினத்தை சரியாக குறிப்பிடுவது மிக அவசியம். ஏதேனும் சிறிய பிழை இருப்பின், ஒன் டைம் பாஸ்வேர்ட் எனப்படும் OTP தேவைப்படும். பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் அல்லது இ-மெயிலுக்கு OTP அனுப்படும்.

ஆதார் எண்ணில் கொடுத்த பெயருக்கும் பான் எண்ணில் உள்ள பெயருக்கும் இடையே வேறுபாடு இருக்குமாயின் இணைப்பு தோல்வியடையும். அப்படி தோல்வியடையும் பட்சத்தில் உண்மையான பெயரை தரவுகளில் திருத்த வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Today is the last date to link aadhaar with pan card how to link aadhaar with pan card

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X