கேரளாவில் நடந்த முதல் புரட்சி திருமணம்!

கேரள மாநிலத்தில் முதன்முறையாக  மூன்றாம் பாலினத்தவர்கள் காதலித்து பெற்றோர்களுடன் சட்டப்படி  திருமணம் செய்துக்  கொண்ட சம்பவம் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த   சூர்யா தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் சில மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு திருநங்கை ஆவர். இவருக்கும், அதே மாநிலத்தைச்  சேர்ந்த இஷான் கே ஷான்க்கும் இடையில் நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்தது.

இதில், இஷான் பெண்ணாக பிறந்து ஆணாக  மாறியவர். சூர்யா தனது மனைவியாக வந்தால், தனது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என எண்ணிய இஷான், தனது காதலை சூர்யாவிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார் சூர்யா.இதனைத்தொடர்ந்து இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததையடுத்து, பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். அனைவரது முன்னிலையிலும் இவர்கள் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேரளாவில் திருநங்கை மற்றும் திருநம்பி திருமணம் சட்டப்படி செல்லும் என்பதால், இஷான் மற்றும் சூர்யா இருவரும் தங்களது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கேரள மாநிலத்தில் நிகழ்ந்த புரட்சி திருமணமாகவே இது பார்க்கப்படுகிறது.

கேரளாவில் திருநங்கை மற்றும் திருநம்பி சட்டப்படி திருமணம் செய்துக் கொண்டது இதுவே முதல் முறை.

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close