Advertisment

திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை: புதிய உத்தரவு

மாவட்ட மாஜிஸ்திரேட் போன்ற மூன்றாவது நபர் சரிபார்த்து சான்றிதழ் கொடுப்பது, அவர்களின் தகுதிகளைப் பறித்துக் களங்கப்படுத்துவது போன்றது என்று LGBTQ சமூகம் இந்த விதிமுறைகள் குறித்து விமர்சித்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
No medical exam to declare gender for transgenders

Transgenders New Rules Tamil: திருநங்கைகள் தாங்கள் விரும்பிய பாலினத்தை தெரிவிக்க இனி மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள அவசியமில்லை என்று கடந்த திங்களன்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், Transgender Persons (உரிமைகள் பாதுகாப்பு) விதிகள் 2020-ஐ வெளியிட்டது.

Advertisment

இதற்கான மறுப்பு மற்றும் பரிந்துரைகளைக் கேட்டுக் கடந்த ஜூலை மாதம் புதிய விதிமுறைகள் அடங்கிய டிராஃப்ட் ஒன்று வெளியிடப்பட்டது. தங்களின் பாலினத்தை மாவட்ட மாஜிஸ்திரேட் போன்ற மூன்றாவது நபர் சரிபார்த்து சான்றிதழ் கொடுப்பது, அவர்களின் தகுதிகளைப் பறித்துக் களங்கப்படுத்துவது போன்றது என்று LGBTQ சமூகம் இந்த விதிமுறைகள் குறித்து விமர்சித்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அறிவிக்கப்பட்ட விதிமுறைகளில், “விண்ணப்பதாரரின் சரியான விவரங்களுக்கு உட்பட்டு, எந்தவொரு மருத்துவ அல்லது உடல் பரிசோதனையும் இல்லாமல், அந்தந்த நபரின் பாலின அடையாளத்தைத் தெரிவிக்கும் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் விண்ணப்பத்தைச் செயலாக்க வேண்டும் என்றும் அதன்பிறகு, விண்ணப்பதாரருக்கு ஒரு அடையாள எண்ணை மாவட்ட மாஜிஸ்திரேட் வழங்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. இந்த எண், விண்ணப்பத்தின் சான்றாக இருக்கும்.

பாலினம் அறிவிப்பதற்கான விண்ணப்ப அமைப்பு முறை ஆன்லைனுக்கு வரும் வரை மாவட்ட மாஜிஸ்திரேட் தரப்பில் நேரடியாக வழங்கப்படும். பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் சார்பாக விண்ணப்பிக்கலாம்.

இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன், ஆண், பெண் அல்லது திருநங்கை என எந்தப் பாலினமாக மாறியிருந்தாலும் தங்களின் பாலின மாற்றத்தை அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்த, திருநங்கைகள் அடையாள சான்றிதழுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்காக மாநில அரசாங்கம், welfare வாரியங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அனைத்து கல்வி, சமூகப் பாதுகாப்பு, சுகாதாரத் திட்டங்கள், நலன்புரி நடவடிக்கைகள், தொழிற்பயிற்சி மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் ஆகியவற்றில் திருநங்கைகளைச் சேர்ப்பதற்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எந்தவொரு அரசாங்க அல்லது தனியார் நிறுவனத்திலும், தனியார் மற்றும் பொதுக் கல்வி நிறுவனத்திலும் திருநங்கைகளைப் பாகுபாடு காட்டுவதைத் தடைசெய்ய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இடுகாடு உட்பட சமூக மற்றும் பொது இடங்களில் சமமான அணுகலை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

மேலும், இந்த புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கென தனி வார்டுகள் மற்றும் கழிப்பறைகள் போன்ற திருநங்கைகள் உணர்திறன் உள்கட்டமைப்பு கட்டப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கண்காணிக்கவும், சரியான நேரத்தில் பதிவு செய்வது, விசாரணை மற்றும் வழக்குத் தொடரப்படுவதை உறுதிப்படுத்துவது போன்றவற்றை உறுதிப்படுத்தவும் ஒவ்வொரு மாநில அரசும் மாநில டிஜிபி மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் தலைமையில் திருநங்கைகள் பாதுகாப்பு கூடத்தை (Transgender Protection Cell) அமைக்க வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Transgenders Lgbtqa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment