சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தமிழில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய அமைச்சர் இந்தியில் பதில் அளித்த விவகாரத்துக்கு தமிழ்நாடு எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஹிந்தியில் மட்டுமே மத்திய அமைச்சர்கள் பேசுவோம் என அடம்பிடிக்கும் நிலையில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வித்தியாசமான போக்கை பின்பற்றுகிறார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் இடைவேளிக்கு ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு, வைஷ்ணவ் தமிழ் மொழியைக் கற்க சக நாடாளுமன்ற எம்.பி உதவியை நாடினார். தமிழ் கொஞ்சம் கற்றுக்கொள்ளலாம் என திமுக எம்பி திருச்சி சிவாவை அவற்றின் அர்த்தங்களுடன் சில வரிகளை எழுதி தர சொன்னார்.
அதில், Vanke(Come In), Thalaivar (leader), Ukkarunga(Please be seated),Sapdunga (Have your food) போன்ற வார்த்தைகள் அடங்கும்.
வைஷ்ணவ் தனது அலுவலக மேஜையில் தனது கோப்புகளின் மேல் தமிழ் வார்த்தையை அடங்கிய காகிதத்தை வைத்துக்கொண்டார். அவற்றைக் கற்றுக்கொள்வதை ஒரு முக்கிய அம்சமாக மாற்றியுள்ளார். மத்திய அமைச்சரின் செயல் தென்மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியத் தூதரின் கவிதை நூல்
மடகாஸ்கர் மற்றும் கொமரோஸ் தீவுகளுக்கான இந்தியத் தூதரான அபய் குமார், கவிஞர் ஆவர். அவர் மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியுடன் அதிக ஈடுபாட்டிற்காக வாதிட்டவர். அவர் தற்போது “மழைக்காலம்” என்ற தலைப்பில் ஒரு கவிதை புத்தகத்தை அறிமுகப்படுத்த இருக்கிறார்.
இதுகுறித்து குமார் கூறுகையில், மடகாஸ்கரில் இருந்து ஸ்ரீநகர் வரையிலான பருவமழையின் பாதையைப் பின்பற்றி, இந்தியப் பெருங்கடல் தீவுகளையும் இந்தியத் துணைக்கண்டத்தையும் ஒரு கவிதை நூலாக பிணைந்த 150 சரணங்கள் கொண்ட கவிதையாகும் என்றார். இந்த நூல், இம்மாத இறுதியில் சாகித்ய அகாடமியால் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஹாஸ்பிட்டலில் போலி நோயாளிகள் – சுப்ரீம் கோர்ட் வாதம்
எம்.பி.பி.ஸ் சீட்டை அதிகரிக்கும் நோக்கில், நோயாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தியதை பிரதிபலிக்கும் வகையில் பதிவுகளை பொய்யாக்கியதாக மருத்துவக் கல்லூரி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் நடத்திய திடீர் விசிட்டுக்கு பிறகு, சீட் அதிகரிக்கும் அனுமதி உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் நீதிபதிகள், ஹிந்தி படம் Munnabhai MBBS-ஐ சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில், இது ஒரு குழந்தை வார்டில், எல்லா குழந்தைகளும் எந்த பிரச்சனையும் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட வழக்கு ஆகும். முன்னாபாய் எம்பிபிஎஸ் பார்த்திருக்கீறிர்களா? மருத்துவமனையில் போலி நோயாளிகள் எப்படி இருந்தனர்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மருத்துவ கல்லூரிக்கு இரண்டு ஆப்ஷனை வழங்கினர்.
ஒன்று, மீண்டும் ஆய்வு நடத்தி அனுமதி தரனும் அல்லுத மேல்முறையீட்டு அதிகாரிகளை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்கியது. இதில், மீண்டும் தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு மேற்கொள்ள சம்மதன் என்பதை கல்லூரி நிர்வாகம் தேர்வு செய்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil