அடேங்கப்பா! இந்திய ரயில்வேயில் 90,000 வேலை: முக்கிய விவரங்கள் இதோ

தொழில்நுட்ப உதவியாளர்கள், லோகோ பைலட்ஸ் உட்பட 90,000 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது,

தொழில்நுட்ப உதவியாளர்கள், லோகோ பைலட்ஸ் உட்பட 90,000 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது, அரசு பணியில் சேர வேண்டும் என விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் சிலவற்றை காணலாம்.

– இந்திய ரயில்வேயின் இந்த அறிவிப்பு உலகிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்புக்கான திட்டமாக கருதப்படுகிறது.

– குரூப் சி (Level I) பிரிவில் உள்ல டிராக் மெயிண்டெய்னர், பாயிண்ட்ஸ் மேன், ஹெல்ப்பர், கேட்மேன், போர்ட்டர் மற்றும் குரூப் சி (Level II) அசிஸ்டண்ட் லோகோ பைலட்ஸ், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்திய ரயில்வேயின் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

– இதற்கான கணினிவழி தேர்வு உலகிலேயே மிகப்பெரியளவிலான தேர்வாக கருதப்படுகிறது. ஏப்ரல் – மே மாதத்தில் இத்தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– 10-ஆம் வகுப்பு, ஐடிஐ உள்ளிட்ட கல்வித்தகுதி கொண்டவர்களுக்குமான பணியிடங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

– நேர்முகத் தேர்வு அல்லாமல் கணினி வழி தேர்வு மூலமாகவே ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுதி: குறைந்தபட்ச தகுதியாக 10-ஆம் வகுப்பு, ஐடிஐ உள்ளிட்ட கல்வித்தகுதி கொண்டவர்களுக்குமான பணியிடங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

பணியிடங்கள்: குரூப் சி (Level I) பிரிவில் உள்ள டிராக் மெயிண்டெய்னர், பாயிண்ட்ஸ் மேன், ஹெல்ப்பர், கேட்மேன், போர்ட்டர் மற்றும் குரூப் சி (Level II) கிரேன் டிரைவர், கார்ப்பெண்டர், ஃபிட்டர், அசிஸ்டண்ட் லோகோ பைலட்ஸ், தொழில்நுட்ப உதவியாளர்கள்

விண்ணப்பிப்பது எப்படி: இந்திய ரயில்வேயின் இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

(//www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,4,1244)

வயது மற்றும் சம்பள விவரம்: குரூப் சி (Level II) பிரிவி விண்ணப்பிப்பவர்கள் 18-28 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். குரூப் சி (Level I) பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் 18-31 வயதுடையவர்களாக இருத்தல் வேண்டும். Level II பிரிவுக்கு 19,000-63,200 வரையும், Level Iக்கு 18,000- 56,900 வரையும் 7வது ஊதிய கமிஷனின் பரிந்துரைபடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: குரூப் சி (Level II) பிரிவுக்கு வீண்னப்பிக்க மார்ச் 5-ஆம் தேதியும், Level I-க்கு விண்ணப்பிக்க மார்ச் 12-ஆம் தேதியும் கடைசி நாளாகும்.

எஸ்.சி/எஸ்.டி. பிரிவினருக்கு தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றுக்கு ரயிலில் இலவச படுக்கை வசதி பாஸ் வழங்கப்படும்.

முக்கிய தேதிகள்:

குரூப் சி (Level II) பணியிடங்களுக்கான அறிவிக்கை – பிப்ரவரி 3

குரூப் சி (Level II)) பணியிடங்கள் விண்ணப்பிக்க துவங்கும் நாள் – பிப்ரவரி 3

விண்ணப்பிக்க கடைசி நாள் – மார்ச் 5

தேர்வு நடைபெறும் மாதம் – ஏப்ரல் – மே

குரூப் சி (Level I) பணியிடங்களுக்கான அறிவிக்கை – பிப்ரவரி 10

குரூப் சி (Level II)) பணியிடங்கள் விண்ணப்பிக்க துவங்கும் நாள் – பிப்ரவரி 10

விண்ணப்பிக்க கடைசி நாள் – மார்ச் 12

தேர்வு நடைபெறும் மாதம் – ஏப்ரல் – மே

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close