”தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது, இந்திய கலாச்சாரத்தின் மீது படிந்த கறை”: பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

”தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது. அது இந்திய கலாச்சாரத்தின் மீது படிந்துள்ள கறை”, என பாஜக எம்.எல்.ஏ. கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

By: October 17, 2017, 4:31:18 PM

”தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது. அது இந்திய கலாச்சாரத்தின் மீது படிந்துள்ள கறை”, என அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை, சுற்றுலா தலங்களின் பட்டியலிலிருந்து நீக்கி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு அண்மையில் அறிவித்தது. இது, மதத்துவேசத்தின் வெளிப்பாடு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்நிலையில், அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் தாஜ்மஹால் குறித்து சமீபத்தில் பேசிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. அவர் பேசியதாவது, “தாஜ்மஹாலை கட்டியவர் இந்துக்களை இந்தியாவிலிருந்தும், உத்தரபிரதேசத்திலிருந்தும் அகற்றும் வேலைகளில் ஈடுபட்டார். தாஜ்மஹாலை சுற்றுலா தலங்களின் பட்டியலிலிருந்து நீக்கியபோது பலரும் வருத்தம் அடைந்தனர். எந்த வரலாற்றை நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்? தாஜ்மஹாலை கட்டியவர் அவருடைய தந்தையையே சிறை வைத்தவர். அப்படிப்பட்டவரை இன்னும் இந்திய வரலாற்றில் குறிப்பிடுவது துரதிருஷ்டவசமானது.”, என கூறினார்.

மேலும், ”அக்பர், பாபர், ஔரங்கசீப் ஆகியோர் இந்தியாவின் மீது படிந்த கறை. அதனை உத்தரபிரதேச அரசு துடைக்கும்.’”, எனவும் அவர் கூறியிருந்தார். தாஜ்மஹால் மற்றும் முகாலய மன்னர்கள் மீதான சங்கீத் சோமின் கருத்துகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Twitterati unhappy with bjp mla sangeet soms taj mahal remark asks if hes against marbles

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X