Advertisment

அசோக் பர்மர்- குதுபுத்தின் அன்சாரி: கலவர காயங்களை கடந்து உதித்த மனிதநேயம்

Two faces of 2002 Gujarat riots: குஜராத் கலவரத்தில் தாக்குதல் நடத்திய அசோக் பர்மரின் கடையை கலவரத்தில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குதுபுத்தின் அன்சாரி திறந்துவைத்த சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
Two faces of 2002 Gujarat riots, Qutubuddin Ansari inaugurates Ashok Parmar, Ahmedabad, Ekta Chappal Shop, குஜராத் கலவரம், குதுபுத்தின் அன்சாரி, அசோக் பர்மர், 2002 Gujarat riots, Qutubuddin Ansari inaugurates Chappal Shop

Two faces of 2002 Gujarat riots, Qutubuddin Ansari inaugurates Ashok Parmar, Ahmedabad, Ekta Chappal Shop, குஜராத் கலவரம், குதுபுத்தின் அன்சாரி, அசோக் பர்மர், 2002 Gujarat riots, Qutubuddin Ansari inaugurates Chappal Shop

Two faces of 2002 Gujarat riots: குஜராத் கலவரத்தில் தாக்குதல் நடத்திய அசோக் பர்மரின் கடையை கலவரத்தில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குதுபுத்தின் அன்சாரி திறந்துவைத்த சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.

Advertisment

இன்றைய இந்திய பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மாபெரும் இந்து முஸ்லிம் கலவரம் நடைபெற்றது. அதில் பலர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் பலர்காயமடைந்தனர். பலர் உடைமைகளை இழந்தனர். குஜராத் கலவர நிகழ்வு இன்றுவரை மோடி மீது விமர்சனமாக தொடர்கிறது.

2002 இல் நடைபெற்ற குஜராத் கலவரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலின் கொடூரத்தையும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் பரிதாப நிலையையும் இரண்டு புகைப்படங்கள் உலக அரங்கில் எடுத்துக்கூறியது. அது கலவரத்தில் பாதிக்கப்பட்ட குதுபுத்தின் அன்சாரி கண்கலங்க இருகைகளையும் கூப்பிய நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படமும், தாக்குதலின்போது வாளுடன் கைகளை உயர்த்தி ஆக்ரோஷமாக நின்ற அசோக் பர்மரின் புகைப்படமும்தான். இந்த புகைப்படங்களைப் பார்த்து உலக பொதுச் சமூகம் குஜராத் கலவரத்தின் கோரத் தாக்குதலையும் அதன் பாதிப்பையும் கண்டு அச்சப்பட்டது.

குஜராத் கலவரத்துக்குப் பிறகு, அந்த புகைப்படங்களில் இடம்பெற்றவர்களின் வாழ்க்கை கடந்த 17 ஆண்டுகளில் மாறியிருக்கிறது. அவர்கள் இருவரும் நண்பர்களாகி இருக்கிறார்கள். நண்பர்கள் என்றால் அசோக் பர்மரின் புதிய காலணி கடையை குதுபுத்தின் அன்சாரி திறந்துவைக்கும் அளவுக்கு நண்பர்களாகி இருக்கிறார்கள்.

எதிர்நிலைகளில் இருந்த அசோக் பர்மரும் குதுபுத்தின் அன்சாரியும் 2014 ஆம் ஆண்டு கேரளாவில் இடதுசாரிகள் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக்கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் இருவரும் நண்பர்களாக கைகுலுக்கிக்கொண்டனர். அந்த நிகழ்வு அப்போது பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது.

அசோக் பர்மர் டெல்லி தர்வாசா அருகே நடைபாதையில் 25 ஆண்டுகளாக காலணி தைக்கும் வேலை செய்துவந்த நிலையில், அண்மையில் அங்கே மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் அந்த இடத்தில் வாழ்க்கையை நடத்த குறைந்த பட்சம்கூட சம்பாதிக்க முடியாமல் போனது. அசோக் பர்மர் தனது நிலையைக் கூறி வருத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஒரு காலணி கடை வைத்துக்கொடுக்க கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதியுதவியை வழங்கியது. அதனைக்கொண்டு அசோக் பர்மர் அகமதாபாத்தில் ‘ஏக்தா செப்பல் கர்’ என்ற கடையை திறக்க முடிவு செய்தார். ஏக்தா செப்பல் கர் என்றால் ஒற்றுமை காலணி கடை என்று அர்த்தம். அசோக் பர்மர் தன்னுடைய ஒற்றுமை காலணி கடையை நேற்று முன்தினம் குதுபுத்தின் அன்சாரியை அழைத்து திறந்துள்ளார்.

ஒற்றுமை காலணி கடையை திறக்கப்பட்டது குறித்து அசோக் பர்மர் கூறுகையில், “நாங்கள் 2014 ஆம் ஆண்டு ஒரு கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டோம். அங்கே நாங்கள் நண்பர்களானோம். குதுபுத்தின் அன்சாரி எழுதிய ஒரு புத்தகத்தை நான் வெளியிட்டேன். நான் அவரிடம் எனது கடையை திறந்துவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அந்த கடையின் பெயர்தான் செய்தி. இன்றைய அகமதாபாத் கடந்தகால ஒன்றிலிருந்து வேறுபட்டிருக்கிறது. இன்று இங்கே இந்து முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்கின்றனர்.” என்று கூறினார்.

அசோக் பர்மரின் கடையை திறந்துவைத்த குதுபுத்தின் அன்சாரி கூறுகையில் “அசோக் பாய் கடையை திறந்துவைக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் கடையை திறந்துவைத்தேன். அவரை வாழ்த்திவிட்டு கடையில் சிறிய தொகைக்கு காலணி வாங்கினேன். காலம் எல்லா காயங்களையும் ஆற்றும். நாம் அப்படியே இருந்தால் நம்மால் வேறு எங்கும் போக முடியாது. நம்முடைய சமுதாயத்திற்காக மக்கள் ஒருவருக்கொருவர் சிந்திக்கின்றனர். அதுதான் இந்தியாவின் அடையாளம்.” என்று கூறினார்.

குஜராத் கலவரத்தில் தாக்குதல் நடத்திய அசோக் பர்மரின் கடையை கலவரத்தின்போது தாக்குதலில் பாதிக்கப்பட்ட குதுபுத்தின் அன்சாரி திறந்துவைத்த சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது. அதைவிட அசோக் பர்மரின் ‘ஏக்தா செப்பல் கர்’ ‘ஒற்றுமை’ காலணி கடையின் பெயருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment