scorecardresearch

உதய்பூர் படுகொலை: கவுஸ் முகமது மளிகை கடைக்காரர்; முகமது ரியாஸ் வெல்டர்!

Udaipur killing accused Mohammad Riyaz is a welder; Ghouse Mohammad opened a general store along with his father Tamil News: விசாரணைக் குழுவில் அங்கம் வகிக்கும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கன்ஹையா லாலைக் கொல்லப் பயன்படுத்திய கத்தியை ரியாஸ் வெல்டிங் செய்ததாக முதல் பார்வையில் தெரிகிறது.

Udaipur killing Tamil News: One accused had general store, other was a welder
Udaipur killing accused Mohammad Riyaz (left); Ghouse Mohammad

Udaipur killing Tamil News: இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவும், நவீன் ஜிண்டாலும் ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டனர். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாட்டின் பல இடங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். நுபுர் சர்மாவுக்கு எதிராக இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. முஸ்லீம் நாடுகளும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தன.

இதற்கிடையில், நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என பரவலாக கோரிக்கைகள் எழுந்தது. அவர் மீது பல்வேறு பாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நுபுர் மேலும், அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை சாடி வருகின்றன.

இந்த நிலையில் தான் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்கடை நடத்தி வந்த கன்ஹையா லால் என்பவர், நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டததாக கூறப்படுகிறது. இதனால், அவரை பட்டப்பகலில் கடைக்குள் வைத்து இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். மேலும், அதனை வீடியோ எடுத்து எச்சரிக்கையும் செய்துள்ளனர்.

இதனால், உதய்பூர் பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. சம்பவ இடத்தில் குவிந்துள்ள போலீசார் அங்கு சட்ட ஒழுங்கு பாதிக்காத வண்ணம் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உதய்பூரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. உதய்பூரில் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணையில், தையல்கடைக்காரர் கன்ஹையா லாலை வெட்டிக் கொலை செய்தது கவுஸ் முகமது மற்றும் முகமது ரியாஸ் ஆகிய இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் தான் தெரிய வந்துள்ளது.

கடந்த செவ்வாயன்று தையல்காரர் கன்ஹையா லால் வெட்டிக் கொல்லப்பட்ட உதய்பூரில் உள்ள சந்தையில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் ராசா காலனியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் தரை தளத்தில் ஒரு சிறிய மளிகை கடை உள்ளது. கடையும், வீடும் பூட்டியே கிடக்கிறது. இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் வெளியே காவலுக்கு நிற்கிறார்கள். கடை மற்றும் வீடு இரண்டும் லாலைக் கொன்ற இருவரில் ஒருவரான கவுஸ் முகமது என்பவருக்கு சொந்தமானது.

இந்த காலனி உதய்பூரில் உள்ள பெரிய காஞ்சிபீர் பகுதியின் ஒரு பகுதியாகும். இது முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. 30 வயதான கவுஸ் முகமது பெரும்பாலும் யாரிடமும் அதிகம் பேசாதவர் என்று அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். “அவர் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர். எதையும் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டார். அவரது பெயர் எந்த விதமான வன்முறையுடன் தொடர்புபடுத்தப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை,” என்று அங்குள்ள ஒரு குடியிருப்பாளரான முகமது ரபீக் கூறினார்.

மற்றொரு பக்கத்து வீட்டுக்காரரான முகமது உமர், இரண்டு பிள்ளைகளின் தந்தையான கவுஸ் முகமது, முன்பு ஒரு முதலீட்டு நிறுவனத்தில் “சேகரிப்பு முகவராக” இருந்தார். “இந்த வட்டாரத்தைச் சேர்ந்த பலர் அவருடன் தினசரி தொடர் வைப்புத்தொகையைச் செய்வார்கள். நிறுவனம் மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கிய பிறகு, பலர் தங்கள் பணத்தை இழந்தனர். அதன்பிறகு, அவர் தனது தந்தையுடன் ஒரு மளிகைக் கடையை திறந்தார், ”என்று கூறினார்.

“எந்த தந்தையும் தாயும் தங்கள் பிள்ளைகள் குற்றவாளிகளாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். இது வெளிப்புற தாக்கம் காரணமாகும். சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து, அவரது தந்தை உடைந்து, “அவன் என்ன செய்தார்? என் மரியாதைக்காகவும், என் முதுமைக்காகவும் அவன் கவலைப்படவில்லை” என்று அப்பகுதியில் வசிக்கும் ஷாமா கான் கூறினார். சிறிது நேரத்தில் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினர்.

சில வீடுகளுக்கு அப்பால், ஒரு இறங்கு பாதையில், இரண்டாவது குற்றவாளியான 30 வயதுடைய முகமது ரியாஸ் வசித்த வீடு உள்ளது. அந்த வீடு பூட்டப்பட்டு, வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

“நான் ரியாஸுக்கு தரை தளத்தில் இரண்டு அறைகளை வாடகைக்கு விட்டிருந்தேன். அவர் ஜூன் 12 அன்று இங்கு குடியேறினார். ரியாஸ் ஒரு வெல்டராக உள்ளார், மேலும் அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இங்கு தங்கியிருந்தார். நான் அவரைப் பற்றி சந்தேகத்திற்குரிய எதையும் கண்டுபிடிக்கவில்லை. நான் அவரிடம் முன்கூட்டியே கொஞ்சம் வாடகை கேட்டேன், ஆனால் அவர் அதை செலுத்த முடியாது என்று கூறினார். சம்பவத்தையடுத்து அவரது குடும்பத்தினர் அங்கிருந்து சென்றுவிட்டனர். எனது வாடகை இன்னும் கிடைக்கவில்லை, ”என்று முகமது உமர் என்ற வீட்டின் உரிமையாளர் கூறினார்.

முன்னதாக ரியாஸுடன் பணிபுரிந்த வெல்டரான கயூம் பெய்க், கடந்த 20 ஆண்டுகளாக உதய்பூரில் பணிபுரிந்து வருவதாகக் கூறினார்.

விசாரணைக் குழுவில் அங்கம் வகிக்கும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், லாலைக் கொல்லப் பயன்படுத்திய கத்தியை ரியாஸ் வெல்டிங் செய்ததாக முதல் பார்வையில் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Udaipur killing tamil news one accused had general store other was a welder