"ஆதார் அட்டை"க்கு வந்துவிட்டது ஆண்ட்ராய்டு ஆப்"!

எம்.ஆதார் எனப்படும் ஆதார் மொபைல் ஆப்-ஐ UIDAI எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (Unique Identification Authority of India) அறிமுகம் செய்துள்ளது....

எம்.ஆதார் எனப்படும் ஆதார் மொபைல் ஆப்-ஐ UIDAI எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (Unique Identification Authority of India) அறிமுகம் செய்துள்ளது.

எம்ஆதார் எனப்படும் இந்த ஆப் அனைத்து ஆன்டிராய்டு செல்ஃபோன்களிலும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகிள் ஃபிளே ஸ்டோரில் இந்த எம்.ஆதார் ஆப்-யை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

இந்த ஆப் வந்துள்ளதன் மூலம், ஆதார் அட்டையை நாம் தூக்கிச் செல்வது அவசிமானதாக இருக்காது என தெரிகிறது. அடையான அட்டையாக ஆதார் பல்வேறு வகையிலும் தேவைப்பட்டுவரும் நிலையில், எம்.ஆதார் ஆப் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆப் மூலமாக தனிநபர் ஒருவர், தனது ஆதார் விவரங்களை லாக் மற்றும் அன்லாக் செய்து கொள்ளும் வசதி இந்த ஆப்-ல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொலைதொடர்பு நிறுவனங்களுடன் ஆதார் எண்ணை ஷேர் கொள்ளவும் இந்த ஆப் பயன்படும் வகையில் உள்ளது.

எம்.ஆதார் ஆப்-யை கூகிள் ஃபிளே ஸ்டோரில் டவுண்லோடு செய்து கொள்ளலாம் என்ற போதிலும், இந்த ஆப்-யை பயன்படுத்த வேண்டுமானால் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்த மொபைல் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close