மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) மக்களவையில் தாக்கல் செய்தார்.
2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கும் மேலாக உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிநிலை அறிக்கையில் இன்னும் 2 பக்கங்களே மீதமிருந்த நிலையில், தொடர்ந்து பேச முடியாத நிலையால் உரையை நிறைவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, ‘அவை’ முறைப்படி நிறைவு செய்யப்பட்டு, திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தகுந்த அம்சமாக பழைய வரி முறைமையிலிருந்து குறைக்கப்பட்டு புதிய வரி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது,
10-12.5 லட்சம் வருமானத்துக்கு 20% வரி விதிக்கப்படும்.
7.5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15% வரி.
2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானத்துக்கு 5% வரி விதிக்கப்படும்.
5 லட்சம் முதல் 7.5 லட்சம் வருமானத்துக்கு 10% வரி விதிக்கப்படும்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் 2020: 'ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஆய்வுகள் ஊக்குவிப்பு' - நிர்மலா சீதாராமன்
5-7.5 லட்சம் வரை வருமான பெற்றவர்களுக்கு 20% வரி விதிக்கப்பட்டு வந்தது இம்முறை குறைக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்த்த அளவில் பட்ஜெட்டில் பெரிய தாக்கல் ஏதுமில்லை என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. குறிப்பாக, தமிழகத்துக்கு என சிறப்பு திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், நிதியமைச்சரின் இந்த பட்ஜெட் தாக்கல் குறித்த பிரபலங்களின் அப்டேட்ஸ் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.
திமுக எம்.பி.கனிமொழி
திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி தனது ட்விட்டரில், "உறுதியான விடைகள் இல்லாத நீண்ட பட்ஜெட்" என்று தனது முதற்கட்ட கருத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
1, 2020A long budget with no concrete solutions
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK)
A long budget with no concrete solutions
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 1, 2020
ராகுல் காந்தி
1, 2020பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி கருத்து!https://t.co/5wMBD3FLqB | #UnionBudget | #Budget2020 | #மத்தியபட்ஜெட்2020 | #NirmalaSitharaman | #IncomeTax | @RahulGandhi | @nsitharaman pic.twitter.com/WWEUk4ALuE
— News7 Tamil (@news7tamil)
#BudgetWithNews7Tamil
— News7 Tamil (@news7tamil) February 1, 2020
பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி கருத்து!https://t.co/5wMBD3FLqB | #UnionBudget | #Budget2020 | #மத்தியபட்ஜெட்2020 | #NirmalaSitharaman | #IncomeTax | @RahulGandhi | @nsitharaman pic.twitter.com/WWEUk4ALuE
என்று குறிப்பிட்டுள்ளார்.
வி.சி.க. எம்.பி. ரவிக்குமார்
1, 2020பூமி திருத்தி உண் - என்ற ஆத்திச்சூடியை குறிப்பிட்டு அது , அவ்வை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது என நிதி அமைச்சர் கூறினார். அது தவறு. சங்ககால அவ்வையும் ஆத்திச்சூடி பாடிய அவ்வையும் வேறு வேறு. ஆத்திச்சூடி பாடிய ஔவை 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
— Dr Ravikumar M P (@WriterRavikumar)
பூமி திருத்தி உண் - என்ற ஆத்திச்சூடியை குறிப்பிட்டு அது , அவ்வை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது என நிதி அமைச்சர் கூறினார். அது தவறு. சங்ககால அவ்வையும் ஆத்திச்சூடி பாடிய அவ்வையும் வேறு வேறு. ஆத்திச்சூடி பாடிய ஔவை 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
— Dr Ravikumar M P (@WriterRavikumar) February 1, 2020
என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,
1, 2020சிந்துவெளியில் கிடைத்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களின் தொன்மை வடிவங்கள்தான் என்று அஸ்கோ பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் முதலானோர் மெய்ப்பித்திருக்கும் வேளையில் அதை வேதகாலத்தோடு இணைத்து வேதங்களில் குறிப்பிடப்பட்ட சரஸ்வதி என்ற கற்பனையான நதியை அதோடு சேர்த்து
— Dr Ravikumar M P (@WriterRavikumar)
சிந்துவெளியில் கிடைத்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களின் தொன்மை வடிவங்கள்தான் என்று அஸ்கோ பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் முதலானோர் மெய்ப்பித்திருக்கும் வேளையில் அதை வேதகாலத்தோடு இணைத்து வேதங்களில் குறிப்பிடப்பட்ட சரஸ்வதி என்ற கற்பனையான நதியை அதோடு சேர்த்து
— Dr Ravikumar M P (@WriterRavikumar) February 1, 2020
1, 2020சிந்துவெளி நாகரிகத்தைத் தன்வயப்படுத்த முயன்றுவரும் சங்கப்பரிவாரங்களின் அரசியல் தொடர்ச்சியாகவே இன்றைய நிதியமைச்சரின் கூற்றைப் பார்க்கவேண்டியிருக்கிறது.
வரலாற்றைத் திரிக்கும் இத்தகைய முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது
— Dr Ravikumar M P (@WriterRavikumar)
சிந்துவெளி நாகரிகத்தைத் தன்வயப்படுத்த முயன்றுவரும் சங்கப்பரிவாரங்களின் அரசியல் தொடர்ச்சியாகவே இன்றைய நிதியமைச்சரின் கூற்றைப் பார்க்கவேண்டியிருக்கிறது.
— Dr Ravikumar M P (@WriterRavikumar) February 1, 2020
வரலாற்றைத் திரிக்கும் இத்தகைய முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது
என்று குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன்:
1, 2020அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது.
நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை.
— Kamal Haasan (@ikamalhaasan)
அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது.
— Kamal Haasan (@ikamalhaasan) February 1, 2020
நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை.
என்று கமல்ஹாசன் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பவார்:
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தனது ட்விட்டரில், "விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் தெளிவான பார்வையோ தெளிவோ இல்லை. இன்னும் இது கனவாகவே இருக்கிறது.
1, 2020Automobile sector has been completely ignored and unemployment issue is not addressed fairly. It was the lengthiest speech but lacked farsightedness and direction.
— Sharad Pawar (@PawarSpeaks)
#Budget2020
— Sharad Pawar (@PawarSpeaks) February 1, 2020
Automobile sector has been completely ignored and unemployment issue is not addressed fairly. It was the lengthiest speech but lacked farsightedness and direction.
ஆட்டோமொபைல் துறை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வேலையின்மை பிரச்சினை நியாயமான முறையில் கவனிக்கப்படவில்லை. இது மிக நீளமான பேச்சு, ஆனால் தொலைநோக்கு பார்வையும் திசையும் இல்லை"
என்று குறிப்பிட்டுள்ளார்.
கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டரில், "
1, 2020தமிழகத்திற்கு பயன் தருகிற எத்தகைய அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. சென்னை - பெங்களூர் விரைவு சாலை திட்டம் குறித்து அறிவிப்பு தான் வெளிவந்திருக்கிறதே தவிர, நிதி ஒதுக்கப்படவில்லை. pic.twitter.com/sf68MmqbmF
— KS_Alagiri (@KS_Alagiri)
தமிழகத்திற்கு பயன் தருகிற எத்தகைய அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. சென்னை - பெங்களூர் விரைவு சாலை திட்டம் குறித்து அறிவிப்பு தான் வெளிவந்திருக்கிறதே தவிர, நிதி ஒதுக்கப்படவில்லை. pic.twitter.com/sf68MmqbmF
— KS_Alagiri (@KS_Alagiri) February 1, 2020
1, 2020நிதிநிலை அறிக்கையை ஒட்டுமொத்தமாக பார்க்கிற போது வளர்ச்சியை நோக்கமாக இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களால் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கருதுகிறது.
— KS_Alagiri (@KS_Alagiri)
நிதிநிலை அறிக்கையை ஒட்டுமொத்தமாக பார்க்கிற போது வளர்ச்சியை நோக்கமாக இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களால் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கருதுகிறது.
— KS_Alagiri (@KS_Alagiri) February 1, 2020
என்று குறிப்பிட்டுள்ளார்.
ப.சிதம்பரம்
முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிச்சலுகையை காங்கிரஸ் வரவேற்கிறது" என்றார்.
பிரதமர் மோடி:
"இந்தியாவை மறுகட்டமைவு செய்யும் வகையில் மத்திய பட்ஜெட் உள்ளது. இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட் உள்ளது" - பிரதமர் மோடி
அமித் ஷா
"பட்ஜெட்டில் மக்களுக்கு பலனளிக்க மோடி அரசு பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது; இந்நடவடிக்கை இந்தியாவை 5 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றும்" - உள்துறை அமைச்சர் அமித்ஷா.
முதல்வர் பழனிசாமி:
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு, முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் அரசின் அறிவிப்புக்கு நன்றி. தனிநபர் வருமான வரி மாற்றி அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு பாராட்டு.
மு.க.ஸ்டாலின்:
பாஜக விரும்பும் கலாசார திணிப்பைச் செய்யும் ஒரு நிதிநிலை அறிக்கையாக இருப்பது வேதனை அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.