“அரசியல் உரிமைகளை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்” – உ.பி. பெண்கள் மத்தியில் ப்ரியங்கா காந்தி

மக்கள்தொகையில் பாதியாக இருப்பதால் அரசியல் உரிமைகளையும் பாதி பெற வேண்டும் என்று பெண்கள் மத்தியில் பேசியுள்ளார் ப்ரியங்கா.

Congress general secretary, Priyanka Gandhi Vadra, uttarpradesh elections

Maulshree Seth

UP assembly elections : உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதன்கிழமை அன்று வாக்காளர்கள் மத்தியில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் படி பெண்களை கேட்டுக் கொண்டனர். பெண்களுக்கு எந்த விதமான உதவிகளையும் செய்யாத ஒரு அரசுக்கு ஏன் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். மக்கள் தொகையில் பாதி இருக்கும் பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களுக்கு தேவையான அரசியல் உரிமைகளை பெற வேண்டும் என்றும் பேசினார்.

பந்தேல்கண்ட் பகுதியில் உள்ள சித்ராகூட் என்ற மாவட்டத்தில் பெண்கள் மத்தியில் பேசிய ப்ரியங்கா இவ்வாறு கூறினார். நவம்பர் 19ம் தேதி அன்று ஜான்சி நகருக்கு வருகை புரிய இருக்கும் பிரதமர் மோடி அங்கே ஜான்சியின் ராணி லக்குமி பாய்யின் பிறந்த தினத்தை கடைபிடிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் வேட்பாளர்களுக்கு 40 சதவீத சீட்டுகளை ஒதுக்குவதாக உறுதியளித்த சில வாரங்களுக்குப் பிறகு, தனது கட்சிக்கு ஆதரவளிக்குமாறு பெண்களை அறிவுறுத்திய பிரியங்கா, காங்கிரஸின் லட்கி ஹூன், லட் சக்தி ஹூன் என்ற பிரச்சாரத்தின் பின்னாள் பெண்களை ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். நீங்கள் உங்கள் மனதை மாற்றி ஒரு முடிவை எடுத்துள்ளதால் நான் உங்களிடம் இங்கே பேச வந்துள்ளேன். நீங்கள் மக்கள் தொகையில் பாதி. உங்களின் குரலை எழுப்புங்கள். ஒன்றிணையுங்கள். உங்களின் அரசியல் உரிமைகளை பெறுங்கள். மக்கள்தொகையில் பாதியாக இருப்பதால் அரசியல் உரிமைகளையும் பாதி பெற வேண்டும் என்று பெண்கள் மத்தியில் பேசியுள்ளார் ப்ரியங்கா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Up assembly elections you are half the population seek your political rights priyanka tells women

Next Story
ஜம்முவில் காங்கிரஸூக்கு சிக்கல்… குலாம் நபிக்கு நெருக்கமான 20 மூத்த தலைவர்கள் ராஜினாமா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com