உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் பகுதியில் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் அருகே கதாவ்லி பகுதியில், பூரி - ஹரித்வார் - கலிங்கா உத்கல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், அங்கு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
10 killed, 30-40 seriously injured, 30 ambulances have reached the spot: Anand Kumar, ADG Law and Order on #Muzaffarnagar train derailment, pic.twitter.com/uNLpO25DSS
— ANI (@ANI) 19 August 2017
விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Extremely pained by the derailment of the Utkal Express in Muzaffarnagar. My thoughts are with the families of the deceased: PM
— PMO India (@PMOIndia) 19 August 2017
இச்சம்பவத்தை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாக தெரிவத்துள்ள மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, நிலைமை குறித்து ஆய்வு செய்ய மூத்த அதிகாரிகளை அனுப்பி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
Sad at train derailment in UP; my thoughts are with deceased & their families. Injured are being rescued & provided relief #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) 19 August 2017
ரயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.