Advertisment

சி.ஏ.ஏ. போராட்டம் : இறந்து போன 16 நபர்களில் 14 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்!

உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளியான பிறகு தான் என்னுடைய சகோதரன் எப்படி இறந்தான் என்றே தெரியும் - ஃபராஸ் கான்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Uttar Pradesh CAA protests

Uttar Pradesh CAA protests

Uttar Pradesh CAA protests : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 16 நபர்கள் வரை உயிரிழந்தனர். அதில் 14 நபர்கள் துப்பாக்கிச் சூடுகளில் உயிரிழந்ததாக 8 மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு தகவல் அளித்தனர். இறந்து போன 16 நபர்களில் ரஷித் என்பவர் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஃபிரோஸ்பாத்தில் உயிரிழந்தார். முகமது சகீர் என்ற 8 வயது சிறுவன் வாரணாசியில் போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் உத்தரவிட்ட பின்னர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

Advertisment

திமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி...

துப்பாக்கிச் சூட்டியில் இறந்தவர்கள் முகமது வக்கீல் (32), லக்னோ, அஃப்தாப் ஆலம் (22), முகமது சரீஃப் (25) - கான்பூர், அனஸ் (21) மற்றும் சுலேமான் (35) பிஜினோர், பிலால் மற்றும் முமகது ஷெஹ்ரோஸ் - சம்பால், ஜாஹீர்(33), மொஹ்சின்(28), அசிஃப் (20) மற்றும் அரீஃப் (20) மீரத், நபி ஜஹான் (24) - ஃபிரோஸ்பாத் மற்றும் ராம்பூரின் ஃபைஸ் கான் (24) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

இறந்து போன ஃபையாஸின் சகோதரர் ஃபராஸ் கான் கூறுகையில் “ஃபையாஸ் வயிற்றில் குண்டடி பட்டு இறந்தான். இதனை பார்த்த மக்கள் சாட்சியும் உள்ளனர். காவல் துறையினருக்கு தெரியும் யாரை முன்னாள் இருந்து சுட வேண்டும் என்று. உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளியான பிறகு தான் என்னுடைய சகோதரன் எப்படி இறந்தான் என்றே தெரியும் என்றும் அவர் கூறினார்.

இது குறித்து சட்டம் மற்றும் ஒழுங்கு துறையின் ஐஜி ப்ரவீன் குமாரிடம் கேட்ட போது, இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் போராட்டக்காரர்கள் பயன்படுத்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கி தான் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

லக்னோவின் காவல்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், வக்கீலின் மரணம் துப்பாக்கிச் சூட்டில் தான் உயிரிழந்தார் என்பதை உறுதி செய்துள்ளார். மேலும் அவரை மிகவும் அருகில் இருந்து யாரோ சுட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். கான்பூரின் நயி பஸ்தி மசூடியின் அருகே அஃதாப் மற்றும் செய்ப் சுட்டு கொல்லப்பட்டனர் என்று சர்க்கிள் சீஃப் மனோஜ் குமார் கூறியுள்ளார். அஃப்தாப் என்னிடம் “காவல்துறையினர் என்னை சுட்டுவிட்டனர்” என்று கூறியதாக அவருடைய மைத்துனர் கூறியுள்ளார். செய்ஃபின் சகோதரர் “என்னுடைய தம்பியை காவல்துறையினர் தான் கொண்டனர். அதனை மக்கள் பார்த்தனர்” என்றும் கூறினார்.

நஹ்தார் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் சிக்கி அனஸ் மற்றும் சுலேமான் உயிரிழந்ததாக பிஜ்னோர் எஸ்.பி. சஞ்சீவ் த்யாகி அறிவித்துள்ளார். பிலால் மற்றும் செஹ்ரோஸ் போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்தனர்;. செஹ்ரோஸின் உடற்கூறு ஆய்வு அறிக்கை இன்னும் அவருடைய பெற்றோர்களுக்கு வழங்கப்படவில்லை. ஜஹீர், மொஹ்சீன், ஆசிஃப் மற்றும் ஆரிஃப் துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக மீரத் நகரின் கூடுதல் எஸ்.பி. அகிலேஷ் நாரயணன் சிங் அறிவித்தார்.

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment