uttar-pradesh | வாரணாசி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை ஞானவாபி மசூதி வளாகத்தின் தெற்கு பாதாள அறையில் பூஜைக்கு அனுமதி அளித்தது.
இது தொடர்பாக மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷா உத்தரவு ஒன்று பிறப்பித்து இருந்தார். அந்த உத்தரவில், சர்ச்சைக்குரிய மேற்கு பாதாள அறையில் உள்ள சிலைகளுக்கு, காசி விஸ்வநாத் அறக்கட்டளை மற்றும் வாதிகளின் பெயரிடப்பட்ட பூசாரி மூலம் பூஜை செய்ய அனுமதி அளித்தார்.
ஜனவரி 24 அன்று, வாரணாசி மாவட்ட நிர்வாகம் ஞானவாபி மசூதி வளாகத்தின் தெற்கு பாதாள அறையை கையகப்படுத்தியது. ஆச்சார்யா வேத் வியாஸ் பீட் கோவிலின் தலைமை அர்ச்சகர் ஷைலேந்திர குமார் பதக் தாக்கல் செய்த வழக்கில், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிர்வாகம் பின்பற்றி, ஜனவரி 17 அன்று ஞானவாபி மசூதியின் தெற்கு பாதாள அறையின் ரிசீவராக வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட்டை நியமித்தது.
வியாஸ் வழக்கில் ஆஜராக வேண்டும் என்ற வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகியின் மனு அன்றே நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் எஸ்.ராஜலிங்கம், “நீதிமன்ற உத்தரவை பின்பற்றி பாதாள அறையை கைப்பற்றியுள்ளோம். இது தொடர்பான நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இது மேற்கொள்ளப்பட்டது.
ஞானவாபி மசூதி வளாகத்தில் நடந்த தொல்லியல் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்ட 6 நாள்களுக்குப் பிறகு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்துள்ளது.
இது குறித்து கோவில் சார்பில் ஆஜராக வழக்குரைஞர், “ஞானவாபி மசூதிக்கு முன்னர் இருந்த கோவில் 17ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் அழிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் கோவில் இருந்த இடத்தில் மசூதி எழுப்பப்பட்டது” என்றார். ஞானவாபி மசூதி வளாகத்தில் நடந்த தொல்லியல் அறிக்கை கடந்த மாதம் மூடிய உறையில் வைத்து சமர்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Varanasi court allows puja at southern cellar of Gyanvapi mosque complex
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“