வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் லண்டனில் இரண்டாவது முறையாக கைதான தொழிலதிபர் தொழிலதிபர் விஜய்மல்லையா, சில மணி நேரங்களிலேயே ஜாமினில் விடுதலையானார். இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9,000 கோடிக்கும் அதிகமாக கடனாக பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா அதனை திருப்பிச் செலுத்தவில்லை.
இது தொடர்பாக விஜய் மல்லையா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை சார்பில் இந்தியாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டன. இதிலிருந்து, தப்பித்துக் கொள்ளும் வகையில் விஜய்மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றார். இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாகவை கைது செய்து திரும்ப இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. விஜய் மல்லையாவை நாடுகடத்தி தங்களிடம் ஒப்படைக்குமாறு, இங்கிலாந்திடம், மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு கைது செய்திருந்தது. எனினும், சில மணி நேரத்திலேயே நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார் விஜய் மல்லையா.
இந்த நிலையில், இந்தியாவில் விஜய்மல்லையா மீது உள்ள வழக்குகள் தொடர்பாக லண்டனில் விஜய் மல்லையா இன்று(அக்டோபர் 3) மீண்டும் கைதானார்.ஆனாலும், கைதான சில மணிநேரங்களிலேயே அவர் மீண்டும் ஜாமீனில் விடுதலையானார்.