ஒடிஷாவில் திருமண அன்பளிப்பாக வந்த பார்சலில் இருந்து வெடிகுண்டு வெடித்து பலியான புதுமாப்பிளையின் கடைசி நிமிடங்களை அந்த குடும்பம் கண்ணீருடன் பகிர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி மேற்கு ஒடிசாவில் உள்ள பாட்னாவை சேர்ந்த சௌம்யா சேகர் மற்றும் ரீமா சாஹூ ஆகியோருக்கு திருமணம் நடந்து முடிந்தது. அளவில்லா மகிழ்ச்சியுடன் தங்களின் வாழ்க்கையை துவங்க காத்திருந்த புதுமண தம்பதிகளுக்கு பிப்ரவரி 23 ஆம் தேதி கடைசி நாளாக அமைந்தது. அன்று தான் அவர்கள் இருவரும் அந்த கிஃபட் பார்சலை பிரித்தனர்.
பொதுவாகவே, திருமணம் ஆன புதுமண தம்பதிகளுக்கு தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடன் இருந்து வந்த அன்பளிப்புகளை பார்ப்பதில் தனி ஆனந்தம் அப்படி, தான் சேகரும், ரீமாவும் அந்த பார்சலை பிரிக்க ஆர்வமாக இருந்துள்ளனர். பார்சல் பிரிக்கப்பட்ட அடுத்த கணமே, வீடே அதிரும் படியான ஒரு சத்தம்.
என்ன நடந்தது என சுதாரிப்பதற்குள், புதுப்மண தம்பதிகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அவர்களுக்கு வந்த பார்சலில் சக்திவாய்ந்த 2 வெடிகுண்டுகள் அனுப்பட்டுள்ளன. அந்த வெடிகுண்டு வெடித்ததில் புதுப்மாப்பிளை மற்றும் 85 வயதான மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரீமா ரத்த வெள்ளத்தில் அவர்களுக்கு அருகில் உயிருக்கு போராட்டி இருந்துள்ளார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் திவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரீமாவின் முகம், கழுத்து, காது பகுதிகள் வெடிகுண்டு வெடித்ததில் பெருமளவில் சேதமடைந்துள்ளன. நேற்றைய தினம், ரீமாவிற்கு சுய நினைவு வந்தது. அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கழுத்து பகுதியில் அதிக காயம் என்பதால் ரீமா செய்கையின் மூலம் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,
“அன்றைய நாளை என்னால் மறக்கவே முடியாது. நானும் என் கணவனும் சிரித்து பேசிக்கொண்டே அந்த பார்சலை பிரிக்க முயற்சித்தோம். பார்சலில் பெயர், முகவரி குறிப்பிடாமல் இருந்தாதால், நண்பர்கள் சர்ஃப்ரஸ் கொடுத்திருக்கிறார்கள் என நினைத்தோம். ஆனால், பிரித்த கணமே அதிக சத்ததுடன் வெடிகுண்டு வெடித்தது. என் கணவர் என் கண்முன்னே இறந்து போனார். மேரேஜ் கிஃப்டில் வெடிகுண்டு வைத்து தரும் அளவிற்கு எங்களுக்கு யார் எதிரி என்று தெரியவில்லை. எங்களின் வாழ்க்கையே இருட்டில் மூழ்கி விட்டது” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
அவர்களின் குடும்பத்தாரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும், போலீசாருக்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. புதுமாப்பிளை சௌம்யா சேகர். பெங்களூரில் பணிப்புரிந்து வந்துள்ளார். பொறியாளரான சேகருக்கும், ரீமாவுக்கும் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 9 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமாக திருமணத்தை நடத்தியதாகவும் அவர்களின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பாட்னா எம் எல் ஏ, கே.வி சிங், ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்னாக்கிடம், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.