எல்லையில் நிலவும் பதற்றம்! இந்திய ராணுவத்தின் பலம் என்ன?

எல்லைப்பிரச்சனையினால் பாகிஸ்தான் மற்றம் சீனாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்கள், அதோடு உள்நாட்டில் தீவிரவாத தாக்குதல்கள் , மாவோயிஸ்ட் தாக்குதல்கள் ஆகியவற்றை இந்தியா எதிர்கொண்டு வருகிறது

இந்தியாவின் ராணுவ பலம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டு தான் வருகின்றன. குறிப்பாக, எல்லைப்பிரச்சனையினால் பாகிஸ்தான் மற்றம் சீனாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்கள், அதோடு உள்நாட்டில் தீவிரவாத தாக்குதல்கள் , மாவோயிஸ்ட் தாக்குதல்கள் ஆகியவற்றை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இது போன்ற சம்பவங்களை கையாளுவதற்காக இந்தியா ராணுப பலத்தை நவீனப்படுத்தி வருகிறது.

குறிப்பிடும்படியாக, ராணுவ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. ஆயுதங்களை தயாரித்தல், விமானப்படை விமானங்கள், கப்பற்படை கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் எதிரிகளை சமாளிப்பததற்கு தேவையானவற்றை இந்தியா மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் பைலஸ்டிக் ஏவுகணை ஆகியவை எதிராளிகளுக்கு கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ராணுவத்தை இந்தியா வேகமாக மேம்படுத்துவது என்பது எதிர்நாடுகளிள் இருந்து வரும் அச்சுறுத்தல்களே முக்கிய காரணமாக கருதப்படுகிறன்றன. இதனால் இந்தியா தனது ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில், வேகமாக ராணுவத்தை நவீனப்படுத்தி வருகிறது.

மேலும், தற்போது இந்தியா ராணுவத்தின் இலக்குகள் சீனாவின் மீது திரும்பியுள்ளன. முதலில் தாக்குதல்களை தொரக்கூடாது என்றும், எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் அணுஆயுதங்களை பயன்படுத்தி பதிலடி கொடுப்பதே இந்தியாவினஅணு ஆயுத கொள்கை. எனினும், நவீனமயமாக்கத்திட்டம், குறிப்பாக பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் ஆகியவற்றை பார்க்கும்போது, சீனாவின் அனைத்து நிலைகளையும் குறிவைப்பதே இந்தியாவின் இலக்காக தெரிகிறது.

இந்தியாவின் ராணுவ பலம் என்ன?

குளோபல்ஃபையர்பவர் கணிப்பின்படி, இந்திய ராணுவத்தில் ஒட்டு மொத்தமாக மொத்தம் 4,207,250 பேர் பணிபுரிக்கின்றனர்.

விமானப்படை

போரின்போது முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுவது விமானப்படை. தாக்குதல் நடத்துதல், உளவு பார்த்தல், கண்ணாணிப்பு, மீட்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு விமானப்படை முக்கித்துவம் வாய்தது என்ற நிலையில், இந்திய விமானப்படையில் ஏர்கிராஃப்ட்(aircraft) டிரான்ஸ்போர்டர்ஸ் (transporters) அட்டாக் ஹெலிகாப்டர்(attack helicopters) உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

indias-air-power

 • இந்தியாவின் ஒட்டுமொத்த விமானப்படை விமானங்களின் எண்ணிக்கை: 2102
 • ஃபைட்டர் ஏர்கிராஃப்ட் : 676
 • அட்டாக் ஏர்கிராஃப்ட்: 809
 • டிராண்ஸ்போர்டர் : 857
 • ட்ரைனர் ஏர்கிராஃப்ட்: 323
 • அட்டாக் ஹெலிகாப்டர் :16

கப்பற்படை

உலகில் உள்ள மிகப்பெரிய கப்பற்படை வைத்திருக்கும் நாடுகளில் இந்தியாவின் கப்பற்படைக்கு 5-வது இடம். அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல், விமானம்தங்கி போர்க்கப்பல் என பல்வேறு விதமான கப்பல்களை இந்திய கடற்படை கொண்டுள்ளது. 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரின் போது இந்தியா வெற்றி பெற்றதில், இந்திய கடற்படையின் பங்கு முக்கித்துவம் வாய்ந்ததாக இருந்தது.

indias-naval-power

 • இந்திய கடற்படையின் மொத்த கப்பல்களின் எண்ணிக்கை : 295
 • ஏர்கிராஃப்ட் கேரியர்ஸ்: 3(1 செயல்பாட்டில் உள்ளது)
 • ப்ரைகேட்: 14
 • டெஸ்ட்ராயர்ஸ்: 11
 • கார்வெட்டிஸ்:23
 • பெட்ரோல் கிராஃப்ட்:139
 • மைன் வெல்ஃபேர் வெஸ்ஸல்: 6

 

இந்திய ராணுவம்

இந்திய எல்லைகளை பாதுகாப்பதில் ராணுவ வீரர்களின் பங்கு அளப்பரியது. பல்வேறு அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்து வரும் இந்திய ராணுவம், பலதுறைகளிலும் வல்லமை படைத்ததாக திகழ்கிறது. அதிக வீரர்களை கொண்டுள்ளதன் அடிப்படையில் இந்திய ராணுவம் உலகினில் 3-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அமெரிக்காவும், 2-வது இடத்தில் சீனாவும் உள்ளது.

indian-armys-strength

 • மொத்த ராணுவ வீரர்கள்: 1.200,25
 • காம்பாட் டேங்ஸ்: 4,426
 • ஆர்மோர்டு ஃபைட்டிங் வெகிகிள்: 6,704
 • டோவுடு ஆர்டிலெரி: 7,414
 • ராக்கெட் ப்ரொஜெக்டர்ஸ்:29

அணு ஏவுகணை

ஏ.சி.ஏ தகவலின் படி, அணு ஏவுகனை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. குறிப்பாக தரை வழியாகவும், கடற்படை கப்பல் தளங்கள் வழியாக மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இருந்து ஏவுகணையை ஏவும் நவீனத்துவத்தை இந்தியா கொண்டுள்ளது.

indias-nuclear-capability

 • இந்தியாவின் அணு ஏவுணைகள் : 130
 • குறைந்த பட்ச தொலைவுக்கான ஏவுகணை:150 கி.மீ
 • மிக அதிகபட்ட தொலைவில் தாக்குதல் நடத்தும் ஏவுகணை: 5000 கி.மீ – 8000 கி.மீ (அக்னி-V)
 • சூர்யா ஏவுகணை: 16,000 கி.மீ சென்று தாக்கக்கூடியது(மேம்படுத்தப்பட்டு வருகிறது)

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close