பணிகளை நிறுத்திய அம்னாஸ்ட்டி இந்தியா! மத்திய அரசின் மீது புகார்

அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தது தவிர வேறொன்றும் செய்யவில்லை நிர்வாக தலைவர் அவினாஷ் குமார் ஆதங்கம்

‘Witch-hunt’: Amnesty International halts India operations, blames Centre

‘Witch-hunt’: Amnesty International halts India operations, blames Centre : மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலகெங்கும் குரல் கொடுத்து வரும் அம்னாஸ்ட்டி இண்டெர்நேசனல் தன்னுடைய பணிகளை இந்தியாவில் நிறுத்தியுள்ளது.  ஆம்னாஸ்ட்டி இந்தியா தன்னுடைய சேவைகளை நிறுத்தி ஊழியர்களை அனுப்புவதாக இன்று அறிவித்துள்ளது.

 மத்திய அரசின் வேட்டை தான் இதற்கு என்று குற்றம் சுமத்தியுள்ளது. இந்த மனித உரிமை அமைப்பின் வங்கிக் கணக்குகள் முற்றிலுமாக முடக்கப்பட்டு பணிகளை நிறுத்தும் சூழல் உருவாகியுள்ளது என்று அறிவித்துள்ளது அந்த அமைப்பு. கடந்த இரண்டு ஆண்டுகளில் அம்னாஸ்ட்டி  இந்தியாவின் செயல்பாடுகளை மத்திய அரசின் ஏஜென்சிகள் தொடர்ச்சியாக ஒடுக்கியது மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்கியது  என்பது ஒரு விபத்தான செயல் இல்லை.

சமீபத்தில் நடைபெற்ற டெல்லி வன்முறை மற்றும் ஜம்மு காஷ்மீரில் மீறப்பட்ட மனித உரிமைகள்  தொடர்பாக டெல்லி காவல்துறை மற்றும் இந்திய அரசு பொறுப்புக்கூற வேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாக கொடுத்த குரலின் விளைவுதான் இந்த ஒடுக்குமுறை. அமலாக்கத் துறை உட்பட பல்வேறு இந்திய நிறுவனங்களால் தொடர்ந்து ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டோம் என்றும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தது தவிர வேறொன்றும் செய்யவில்லை என்றும் இந்த அமைப்பின் இந்திய நிர்வாக தலைவர் அவினாஷ் குமார் கூறியுள்ளார்.

அம்னாஸ்ட்டியின் இந்திய பிரிவு எந்த விதிமுறைகளை மீறியது என்று இதுவரை தெளிவான அறிக்கை கிடைக்கவில்லை. இந்திய அரசின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி தான் பணியாற்றுகிறோம் என்று கூறிய அந்த அமைப்பு, பண மோசடிகளை ஊக்குவிக்கும் வகையில் அம்னாஸ்ட்டியின் பணப்பரிவர்த்தனை செயல்பாடுகள் இருக்கிறது என்று அரசு கூறியதை கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Witch hunt amnesty international halts india operations blames centre

Next Story
உடைக்கும் பணிக்கு தயாரானது ஆலங்; இறுதி பயணத்தை முடித்தது ஐ.என்.எஸ் விராட்!INS Viraat set for dismantling at Alang yard
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com