Advertisment

மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல் : பதறவைக்கும் பின்னணி

மணிப்பூரில் குக்கி- சொமி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்கள், நிர்வாணப்படுத்தப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் கலவரம் தொடங்கியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு முன்பாக இந்த சம்பவம் நடைபெற்றும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை

மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை

மணிப்பூரில் குக்கி- சொமி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்கள், நிர்வாணப்படுத்தப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் கலவரம் தொடங்கியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு முன்பாக இந்த சம்பவம் நடைபெற்றும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Advertisment

இந்த வீடியோ பார்க்கும் யாரையும் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தும். இந்நிலையில் இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மணிப்பூர் முதலமைச்சர் என் பிரேன் சிங்கை அழைத்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில் , மே 4ம் தேதி மணிபூரின் தவுபல்  மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட காரணங்களுக்காக 2 மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இது தொடர்பாக மணிப்பூர் காவல் கண்காணிப்பாளர் கே மேகசந்திரா சிங் கூறுகையில், “ சமந்தபட்ட குற்றவாளிகளை கைது செய்ய மாநில காவல்துறை முழு முயற்சி எடுத்து வருகிறது” என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் மெய்தி சமூகத்தினர் அதிகமாக இருக்கும் பகுதியில் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் இந்த சம்பவம் தொடர்பாக கங்கோபி மாவட்டத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்த உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. சம்பவம் நடந்த தவுபல் மாவட்ட காவல் நிலையத்திற்கு இந்த புகார் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகாரில், “ இந்த வீடியோவில் 2 பெண்கள் மட்டுமே இருந்தனர்.  ஆனால் 3 பெண்கள் மற்றும் கிராமத்தில் இருந்த 5 பேர் மற்றும் இளம் பெண்ணின் குடும்பத்தினர் இருவர் இருந்துள்ளனர். 800 முதல் 1000 ஆண்கள் கும்பலாக அப்பகுதிக்கு வந்து, வீடுகளை தாக்கி, தீ வைத்துள்ளனர். இவர்கள் கையில் ஏ.கே ரைபில்ஸ் மற்றும் பல்வேறு ஆயுதங்களை வைத்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் காவல்துறையினரால் காப்பாற்றப்பட்டு, காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியில், மீண்டும் இந்த கும்பல் காவல்துறையினர் வாகனத்தை மறித்து இவர்களை இழுத்துச் சென்றுள்ளது.  இளம் பெண்ணின் தந்தை சம்பவ இடத்திலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். 20 வயது, 40 வயது, 50 வயது மதிப்புள்ள 3 பெண்கள், நிர்வாணப்படுத்தப்பட்டனர். இளம் பெண், அனைவரின் முன்னால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். தங்கைக்கு உதவி செய்ய முயற்சித்த சகோதரரும், கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த மூன்று பெண்களும், தேங்க்னோவ்பல் மாவட்டம் வழியாக தப்பிச் சென்று, தற்போது நிவாரண முகாமில் உள்ளனர்.

இது தொடர்பாக ராகுல் காந்தி பதிவிட்ட ட்விட்டில் “ பிரதமர் மவுனம் மற்றும் செயலற்ற தன்மைதான் இதுபோன்ற மோசமான நிகழ்வுக்கு கொண்டு சென்றுள்ளது. இந்தியா என்ற சிந்தனை மணிப்பூரில் தாக்கப்படும் போது இந்தியா அமைதியாக இருக்காது. மணிப்பூர் மக்களுடன் நாங்கள் நிற்கிறோம். முன்னோக்கிச் செல்ல அமைதி மட்டுமே ஒரே வழி” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment