ரஷ்ய நாட்டில் சுமார் 30 பேருக்கு மயக்க மருந்து கொடுத்து கொன்று, நர மாமிசம் சாப்பிட்டதாக தம்பதிகள் இருவரை அந்நாட்டு காவல் துறை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிரஸ்னோதார் நகரில் சமீபத்தில் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், அங்கிருந்து கேட்பாரற்று கிடந்த செல்ஃபோன் ஒன்றை கைப்பற்றி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த செல்ஃபோனை காவல் துறையினர் ஆராய்ந்தபோது, அதில் ஒருவர் மனிதரின் வெட்டப்பட்ட நர மாமிசத்தை சாப்பிடுவது போன்ற புகைப்படம் இருப்பது தெரியவந்தது.
அதேசமயம், விமான பயிற்சி மையத்துக்கு அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் வெட்டப்பட்ட தலை கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துறையினர் கைப்பற்றப்பட்ட செல்ஃபோனின் உரிமையாளரை தொழில் நுட்பத்தின் உரிமையாளரை கண்டறிந்தனர். நடாலியா பக்ஷீவா (வயது 42) என்பவர்தான் அந்த செல்ஃபோனின் உரிமையாளர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, நடாலியாவையும் அவருடைய மனைவி டிமிட்ரி பக்ஷீவையும் கைது செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் விமான பயிற்சி கல்லூரியில் சமையல் வேலை செய்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் விசாரித்ததில் கடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. தம்பதியர் இருவரும் கடந்த 30 வருடங்களாக, மனிதர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்கள் உயிருடன் இருக்கும்போதே, தோலை உரித்து நர மாமிசம் சாப்பிட்டு வந்தது தெரியவந்தது. மேலும், பயிற்சி பள்ளிக்கு வரும் மாணவர்கள், அதிகாரிகள், அங்குள்ள கடைக்காரர்களுக்கு நர மாமிசத்தைக் கலந்து கொடுத்ததும் தெரியவந்தது. சாப்பிட்டு மீதமிருக்கும் நர மாமிசத்தை உப்பு கரைசலில் பாதுகாத்து வந்ததையும் அவர்கள் வீட்டிலிருந்து காவல் துறையினர் கைப்பற்றினர்.
கடந்த 30 வருடங்களாக இத்தகைய மனித தன்மையற்ற செயலை அத்தம்பதியினர் செய்துகொண்டிருந்ததாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்கள், மேலும், சொச்சி எனுமிடத்தில் மாயமான சுமார் 30 பேரையும் அவர்கள் இம்மாதிரி கொன்றிருக்கலாம் என காவல் துறையினர் அஞ்சுகின்றனர்.
அவர்கள் வீட்டிலிருந்து நர மாமிசத்தை கைப்பற்றி காவல் துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.