Advertisment

ஆளரவமற்ற இடத்தில் சிக்கினார்: உயிர்பிழைக்க தன் சிறுநீரையே குடித்தார், 150 கி.மீ. நடந்தே வந்தார்

ஆஸ்திரேலியாவில் யாருமற்ற குக்கிராமத்தில் கார் விபத்துக்குள்ளாகி தனித்து விடப்பட்ட இளைஞர் , உயிர் பிழைப்பதற்காக தன்னுடைய சிறுநீரையே குடித்ததாக தெரிவித்தார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
thomas mason, urine, australia

ஆஸ்திரேலியாவில் யாருமற்ற குக்கிராமத்தில் கார் விபத்துக்குள்ளாகி தனித்து விடப்பட்ட இளைஞர் ஒருவர், தன்னுடைய சிறுநீரையே குடித்து உயிர் பிழைத்ததாக தெரிவித்தார்.

Advertisment

ஆஸ்திரேலியாவை சேர்ந்த தாமஸ் மேசன் தெற்கு ஆஸ்திரேலிய எல்லையில் உள்ள தொலைத்தொடர்பு உள்ளிட்ட வசதிகள் இல்லாத குக்கிராமத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஒருநாள் தன் பணியை முடித்துக்கொண்டு தன்னுடைய காரில் யூலரா எனும் இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வாகனத்திற்கு எதிர்புறமாக வந்துகொண்டிருந்த ஒட்டக கூட்டத்திடம் இருந்து தப்பிக்க தனது காரை திருப்பியுள்ளார். இதில் கார் விபத்துக்குள்ளாகி நொறுங்கியுள்ளது. எனினும், தாமஸ் மேசன் காயங்கள் இன்றி உயிர் பிழைத்தார்.

எந்தவித வசதிகளும் இன்றி, ஆள் அரவமற்ற அப்பகுதியில் மேசன் தன்னந்தனியாக சிக்கிக் கொண்டார்.

கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் சுமார் 150 கிலோமீட்டர் நடந்துவந்தார். அதன் பிறகுதான் அவருக்கு உதவி கிடைத்தது. கடினமான அந்த நடைபயணத்தின்போது சாப்பிடுவதற்கும் ஏதும் இல்லை.

மேசனிடம் இருந்தது கொஞ்சம் ஆடைகள், ஒரு டார்ச் லைட். அதன் உதவியுடன் தான் மேசன் நடக்க ஆரம்பித்தார். செல்ஃபோன் தொடர்பும் துண்டிக்கப்பட்டதால் அவர் உதவிக்கு அழைக்க கூட யாரும் இல்லாத நிலைமை ஏற்பட்டது.

நம்ப முடியாத வகையில், சாலையின் ஒரு மூலையில் இருந்த தண்ணீர் டேங்கை கண்டார் மேசன். அதிலிருந்து தண்ணீர் குடித்தார். ஆனால், அது கொஞ்ச நேரத்துக்குதான் உதவியது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தன் சிறுநீரையே குடிக்கும் நிர்ப்பந்தத்திற்கு மேசன் ஆளானார்.

அதன்பிறகு சுமார் 2 நாட்கள் நடந்து பிரதான சாலையை அடைந்தார் மேசன். சுமார் 60 மணி நேரங்கள் அவர் நடந்திருக்கிறார். 140 கிலோ மீட்டர் தூரம் பயணித்தார்.

அதன்பிறகு அங்கு வந்த தன் தந்தை மற்றும் தாயின் மூலம் மேசன் மீட்கப்பட்டார்.

”நான் அங்கேயே இறந்துவிடுவேன் என நினைத்தேன். ஆனால், நெடுஞ்சாலைக்கு வந்த பிறகுதான் உயிர் பிழைத்தேன். பல முறை இந்த முயற்சியை கைவிட்டு விடலாம் எனக்கூட யோசித்திருக்கிறேன். நல்லவேளை என் பெற்றோர் அங்கு வந்து என்னை காப்பாற்றாவிட்டால் நான் மீண்டும் நடந்திருப்பேனா என எனக்கு தெரியவில்லை. இப்போது நான் அதிர்ஷ்டக்காரனாக உணர்கிறேன்” என மேசன் கூறினார்.

மேசன் தற்போது நீர்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment