ட்ரம்ப் வார்த்தைகளை உண்மையாக்கிய பயங்கரவாதிகள்! 22 பேர் பலி… 59 பேர் படுகாயம்!

உள்ளூர் நேரப்படி இரவு 10.35 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது

By: Updated: May 23, 2017, 12:51:58 PM

சவூதி அரேபியாவில் நடந்த அரபு-இஸ்லாமிய-அமெரிக்க உச்சி மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ‘அமெரிக்காவில் பல தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்திருப்பது போன்று, ஐரோப்பா, ஆப்ரிக்க நாடுகள், தென்னமெரிக்க நாடுகள், இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தீவிரவாத தாக்குதல்களின் இலக்காக உள்ளன’ என்றார்.

இந்நிலையில், மான்செஸ்டர் நகரில் உள்ள மைதானம் ஒன்றில், அமெரிக்க இசைக் கலைஞர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்தது. அந்நிகழ்ச்சி முடிந்தவுடன் அங்கு திடீரென குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்தனர், 59 பேர் படுகாயம் அடைந்தனர். உள்ளூர் நேரப்படி இரவு 10.35 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. ‘தற்கொலை பயங்கரவாதி தான் இத்தாக்குதலை நடத்தி உள்ளான்’ என அமெரிக்க அதிகாரிகள் கூறி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதல் குறித்து “இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலை போலீஸ் தீவிரவாத தாக்குதலாகவே கருதுகின்றனர். இத்தாக்குதல் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்” என பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறிஉள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில், “மான்செஸ்டர் நகர தாக்குதல் வருத்தமளிக்கிறது. இத்தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Bomb attack in london at ariana grande show

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X