Advertisment

மனிதர்களை போல் கதவை திறக்கும் ரோபோ: இணையத்தைக் கலக்கும் வீடியோ!

பின்பக்கம் யாரேனும் இருக்கிறார்களா? என்று எட்டிப் பார்த்து விட்டு ரோபோ கதவைத் திறப்பது செம ஹைலட்டாக பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மனிதர்களை போல் கதவை திறக்கும் ரோபோ: இணையத்தைக் கலக்கும் வீடியோ!

அமெரிக்காவில் பாஸ்டன்  நிறுவனத்திற்கு சொந்தமான ரோபோ ஒன்று, மனிதர்களை போலவே கதவை திறந்துக் கொண்டு வெளியேறும் வீடியோ காட்சி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

இன்றைய தொழில் நுட்ப உலகம், அடுத்தக் கட்டத்திற்கு வெகுவாக முன்னேறி வருகிறது. மனிதர்களின் மூளையை மிஞ்சும் வகையில் வெளிவரும் ஒவ்வொரு கண்டுப்பிடிப்புகளும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது. அந்த வகையில், ரோபோ தயாரிப்பில் முன்னோடியாக திகழும் பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனத்தின் புதிய ரக ரோபோ அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

ரோப்பக்களின் கண்டிப்பிடிப்பு மனித வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மூத்த அறிவியாலளர்கள் பலர், கூறிவிட்டு சென்ற கருத்து தற்போது செயல்பட துவங்கியுள்ளது. பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனத்தின்  புதிய கண்டுப்பிடிப்பான 4 கால்களை கொண்ட ரோபோ மனிதர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும் இந்த ரோபோ பார்ப்பதற்கு நாய் போன்று 4 கால்களை பெற்றுள்ளது.

சமீபத்தில், இந்த ரோபோவிற்கான அறிமுக விழா அமெரிக்காவில் நடத்தப்பட்டது. இந்த ரோபோ செயல்படும் விதத்தையும் அந்நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில், நான்கு கால்களுடன் ரோபோ ஒன்று ’டக் டக்’ என நடந்து வருகிறது. அப்போது கதவு மூடியிருப்பதைக் கண்டு பின் வாங்குகிறது. அதை கவனித்த மற்றொரு மஞ்சள் நிற பெரிய ரோபோ விருவிருவேன நடந்து வந்து மூடியிருக்கும் கதவை மனிதர்கள் போலவே அசால்ட்டாக திறக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து போயியுள்ளனர். அதிலும், மனிதர்களை போலவே, பின்பக்கம் யாரேனும் இருக்கிறார்களா? என்று எட்டிப் பார்த்து விட்டு ரோபோ கதவைத் திறப்பது செம ஹைலட்டாக பார்க்கப்படுகிறது.

https://www.youtube.com/watch?time_continue=2&v=fUyU3lKzoio

இந்த வீடியோ பதிவிட்ட சில மணி நேரத்திற்குள் மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. நாளைய உலகில் ரோபோக்கள் புதிய புரட்சியை செய்ய இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில், ரோபோக்கள் உணவு பரிமாறுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. சவூதியில், ஒரு ரோபோவிற்கு அந்நாட்டு அரசு மனிதர்களுக்கு வழங்கும் குடியிரிமையை அளித்து சிறப்பித்துள்ளது.

,

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment