கனடா நாட்டில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது. இந்நிலையில், இதுவரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே இருந்த கனடா தேசிய கீதம், தற்போது நாடு தழுவிய நிலையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மற்றும் பேசப்படும் தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ், அரபி, அமெரிக்க சைகை மொழி, கிரேக்கம், ஆங்கிலம், ஃபிரஞ்சு, ஜெர்மன், இத்தாலி, சீன மான்டரின், பஞ்சாபி, ஸ்பானிஷ், டாகாலோக் ஆகிய 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது.
https://www.youtube.com/embed/1Ws7b5F1W-Q
வரும் ஜுலை 1-ஆம் தேதி கனடா நாட்டின் 150 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், 12 மொழிகளில் கன்னட தேசிய கீதம் வெளியாகியுள்ளது. இதன் தமிழ் மொழி ஆக்கம் கவிஞர் கந்தவனம் அவர்களால் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.