ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில், இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கார் மூலம் நிகழ்த்தப்பட்ட இந்த கோர குண்டுவெடிப்பு சம்பவத்தில், 80 பொதுமக்கள் பலியாகி இருப்பதாகவும், 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஜெர்மன் தூதரகத்திற்கு வெளியே நடந்துள்ளது. இந்திய தூதரகம் அங்கிருந்து நெருங்கிய தூரத்தில் தான் உள்ளது.
அதிர்ஷ்டவசமாக, இந்திய தூதரக அதிகாரிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்திய தூதரக கட்டிடத்தின் கதவு மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன.
https://www.youtube.com/embed/Cvjoi0jv-os
ஈரான் தூதரகத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும், எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
31, 2017
இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், " இந்த தீவிரவாத தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். தீவிரவாதத்தை எதிர்க்கும் நடவடிக்கையில், ஆஃப்கானிஸ்தானுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும். தீவிரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும்" என்றார்.