Advertisment

பனாமா பேப்பர்ஸ் மூலம் மால்டா பிரதமரின் ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் படுகொலை

பனாமா பேப்பர்ஸ் மூலம் மால்டா நாட்டின் பிரதமர் ஜோசஃப் மஸ்கட்டின் ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் டேஃப்னி கருவானா கலிசியா படுகொலை செய்யப்பட்டார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
Panama Papers,journalist Daphne Caruana Galizia,malta PM joseph muscat

பனாமா பேப்பர்ஸ் மூலம் மால்டா நாட்டின் பிரதமர் ஜோசஃப் மஸ்கட்டின் ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் டேஃப்னி கருவானா கலிசியா, வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.

Advertisment

வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மால்டாவை சேர்ந்தவர் டேஃப்னி கருவானா கலிசியா. புலன் விசாரணை பத்திரிக்கையாளரான இவர், கடந்த திங்கள் கிழமை தன் வீட்டிலிருந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருடைய கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசினர். இதில், டேஃப்னி உயிரிழந்தார்.

 Panama Papers,journalist Daphne Caruana Galizia,malta PM joseph muscat

யார் இந்த பத்திரிக்கையாளர் டேஃப்னி கருவானா கலிசியா?

பனாமாவை சேர்ந்த சட்ட நிறுவனமான மொசாக் பொன்சேக்கா என்ற நிறுவனத்திலிருந்து, கடந்த 2015-ஆம் ஆண்டு கசிய வைக்கப்பட்ட ஆவணங்கள்தான் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றது. பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகள் குவிக்க உதவிய நிறுவனம்தான் மொசாக் பொன்சேக்கா. இந்நிலையில், வெளியான பனாமா பேப்பர்ஸ் ஆதாரங்களை ஆராய 107 நாடுகளை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு களமிறங்கியது. அதில், மால்டா நாட்டின் சார்பாக களமிறங்கியவர்தான் டேஃப்னி கருவானா கலிசியா.

இதன்மூலம், மால்டா நாட்டு பிரதமர் ஜோசஃப் மஸ்கட் மற்றும் அவரது மனைவி மிச்செல் ஆகியோருக்கு பனாமா ஊழலில் தொடர்பிருப்பதை அம்பலப்படுத்தினார். ஆனால், அதனை இருவரும் மறுத்தனர்.

இந்நிலையில், திங்கள் கிழமை அவரது கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இறப்பதற்கு இரண்டு வாரங்கள் முன்பு, தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக அவர் போலீசாரிடம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Panama Papers,journalist Daphne Caruana Galizia,malta PM joseph muscat

பல அவதூறு புகார்களை சந்தித்தவர்:

பத்திரிக்கையாளர் டேஃப்னி “Running Commentary” என்ற இணையத்தளத்தில் பல கட்டுரைகள் எழுதியவர். ’ஒன் வுமன் விக்கிலீக்ஸ்’ என்ற இணையத்தளத்தையும் அவர் நடத்தி வந்தார். இந்த இணையத்தில் பிரதமர் ஜோசஃப் மஸ்கட் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு எதிராக பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். அதற்காக, பல அவதூறு வழக்குகளையும் அவர் சந்திக்க நேர்ந்தது. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் ஆட்ரியன் டெலியா லண்டனில் நடைபெறும் பாலியல் தொழில் சார்ந்த குற்றங்களுடன் தொடர்புபடுத்தி எழுதியதற்காகவும், பொருளாதார துறை அமைச்சர் க்ரிஸ் கர்டோனா அரச முறை பயணமாக ஜெர்மனிக்கு சென்றபோது பாலியல் தொழில் மேற்கொள்ளப்படும் இடத்திற்கு சென்றதாக எழுதியதற்காகவும் அவதூறு வழக்குகளை சந்தித்தார்.

பிரதமர் கண்டனம்:

பத்திரிக்கையாளர் டேஃப்னியால் ஊழல் அம்பலப்படுத்தப்பட்ட மால்டா பிரதமர் ஜோசஃப் மஸ்கட் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். தனிப்பட்ட ரீதியிலும், அரசியல் ரீதியிலும் தன்னை கடுமையாக விமர்சித்தவர் பத்திரிக்கையாளர் டேஃப்னி என கூறியுள்ள பிரதமர் ஜோசஃப் மஸ்கட், அவர் மீதான தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது எனவும், கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் எனவும் விமர்சித்திருக்கிறார். அவரது மரணம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment