ஆஸ்திரேலிய நாடு முழுவதும் 10 லட்சம் உள்நாட்டு பறவைகள் காட்டுப்பூனைகளால் கொல்லப்படுவதாக, ஆராய்ச்சி ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், வருடந்தோறும் காட்டுப்பூனைகள் 316 மில்லியன் பறவைகளையும், வீட்டில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் 61 மில்லியன் பறவைகளையும் வேட்டையாடுவது தெரியவந்துள்ளது.
இதனால் அரிய வகை பறவையினங்கள் கடுமையாக அழிந்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரியன முதல் சிறிய பறவைகள் வரை பூனைகளின் வேட்டையால் தாக்குதலுக்குள்ளாகின்றன. கூடுகளில் உள்ள பறவைகள், தொலைதூர தீவுகள், வறண்ட பகுதிகளில் உள்ள பறவைகள் இத்தகைய தாக்குதல்களால் அதிகம் பாதிப்படைகின்றன.
ஆஸ்திரேலிய நாடு முழுவதும் சுமார் 11 பில்லியன் பறவைகள் உள்ளன. அவற்றில் 4 சதவீத பறவைகளை பூனைகள் வேட்டையாடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இத்தகைய வேட்டையால், 338 உள்நாட்டு பறவையினங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றுள் 71 பறவையினங்கள் அழிந்துவரும் இனங்கள் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதனால், காட்டுப்பூனைகள், மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளை குறைக்கும் எண்ணிக்கையிலும், அவற்றுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கையிலும் அந்நாட்டு அரசாங்கம் இறங்கியுள்ளது.