சீனாவில் உயிருடன் இருந்த பெண் குழந்தையை பெற்றோர் பிளாஸ்டிக் பையில் பார்சலாக சுற்றி கொரியர் அனுப்ப முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சீனாவில் ஃபுஜியான் மாகாணத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் உயிருடன் உள்ள பெண் குழந்தையை பெற்றோர் பிளாஸ்டிக் பைக்குள் வைத்து, அதனை பல பிளாஸ்டிக் பைகளால் பார்சல் போல் சுற்றி கொரியர் அலுவலகத்துக்கு சென்று ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிடுமாறு கூறியுள்ளனர்.
பார்சலில் என்ன உள்ளது என கொரியர் அலுவலக ஊழியர்கள் அவர்களிடம் கேட்டதற்கு, உணவுப்பொருட்கள் இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால், பார்சலில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டதையடுத்து, பார்சலை ஊழியர்கள் திறந்து பார்த்தனர். அதில், உயிருடன் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டார்.
மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமான நிலையில் உள்ளது. சீனாவில், குழந்தையை ஆதரவற்றவராக்குவது குற்றமாகும்.
சீனாவில், வருடந்தோறும் 10,000 குழந்தைகள் ஆதரவற்றவர்களாக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உயிருடன் உள்ள குழந்தையை பெற்றோர் பார்சலாக சுற்றி கொரியர் அனுப்ப முயன்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.