சுற்றுலா செல்ல யாருக்குத்தான் பிடிக்காது? அதிலும், ஆண்டுக்கு ஒரு முறை தொலை தூரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதை பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக, யாரும் செல்லாத இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.
பரந்து விரிந்த இந்த பூமியில் எத்தனை எத்தனையோ நாடுகள், நகரங்கள், கிராமங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அவை அனைத்தையும் தன் வாழ்நாளில் ஒட்டுமொத்தமாக எந்த ஒரு மனிதனாலும் பார்த்து விட முடியாது. இருந்தாலும் அனைவரும் அவர்களால் முடிந்த அளவிற்கு பல இடங்களைப் போய் பார்த்து வருகிறார்கள்.
சுற்றுலா என்பது நம் அன்றாட வாழ்க்கைச் சூழலில் பெற முடியாத ஒரு மகிழ்ச்சியையும், பல புதிய இடங்களை பார்ப்பதால் அடையும் திருப்தியையும் கொடுப்பதாகும். வேறு ஒரு நாட்டுக்கு சென்று அங்குள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் இரண்டு நாட்களாவது தங்கி, எந்த தொந்திரவும் இல்லாமல் சுற்றிப் பார்த்து வர வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும்.
பல நாட்டு சுற்றுலா பயணிகளும் ஒவ்வொரு நாட்டுக்கு செல்லும் போது அங்குள்ள உணவு பொருட்களை ருசி பார்ப்பது வழக்கம். அதேபோல அந்தந்த நாட்டு பெண்களையும் உறவு கொண்டு அனுபவத்தை பெறுகிறார்கள் பல சுற்றுலா பயணிகள். இதற்கு செக்ஸ் டூரிசம் என்று பெயரிட்டு அதை சார்ந்த சுற்றுலாவையும் வளர்த்து கல்லா கட்டுகிறது பல நாடுகள்.
உலகம் எங்கும் செக்ஸ் டூரிசம் என்ற பெயரில் பெண்கள் மற்றும் ஆண்கள் விபசாரத்தில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. அப்படி இருக்கையில், விபசாரத்தை சட்டப்பூர்வமாக கொண்ட தென் அமெரிக்க நாடானா கொலம்பியா மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்குமா என்ன?
கொலம்பிய நாட்டின் காலி எனும் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்று, ஏர்போர்ட்டில் இருந்து ஹோட்டல் வரை பிக் அப்-டிராப், சொகுசு அறைகள், மது வகைகள், என பல்வேறு வசதிகளை கொடுக்கிறது. அத்துடன் கூடுதலாக பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் வசதியையும் கொடுக்கிறது.
"குட் கேர்ள்ஸ் ரிசார்ட்" (Good Girls Resort) எனும் பெயர் கொண்ட அந்த ஹோட்டல் தனது இணையதளத்தில்,"தனி வில்லாக்கள் மற்றும் அழகான கொலம்பிய பெண்களை கொண்ட அற்புதமான ரிசார்ட் எங்களுடையது. ஆண்கள் தங்களது கற்பனையில் கண்ட ஏக்கங்களை அனுபவித்துக் கொள்ள ஏதுவான அழகான சூழல் இது" என பெருமையாக பதிவிட்டுள்ளது.
ஓவர் நைட், ப்ரான்ஸ், சில்வர், கோல்ட் என மொத்தம் நான்கு வகையான பேக்கேஜ்களை இந்த ரிசார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஓவர் நைட் பேக்கேஜ்-ல் டீலக்ஸ் ரூம், ஏர்போர்ட் பிக் அப்-டிராப், ஓரிரவுக்கு ஒரு பெண் என்பன உ ள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது. இதற்கு 599 அமெரிக்க டாலர்களை கட்டணமாக இந்த ஹோட்டல் வசூல் செய்கிறது. கோல்ட் பேக்கேஜ்-ல் 24 மணி நேரத்துக்கு இரண்டு பெண்கள், எக்ஸிகியூட்டிவ் வில்லா, உணவு, ஸ்பா செய்வதற்கான பாஸ் என்பன உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. இதற்கு கட்டணமாக 1499 அமெரிக்க டாலர்கள் வசூல் செய்யப்படுகிறது.
நிதி பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள வறுமை மற்றும் இடம்பெயர்வு காரணமாக கொலம்பிய நாடு முழுவதும் விபசாரம் பரவலாக பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொலம்பிய நாட்டில் உள்ள இந்த ஹோட்டல் வினோதமான ஒன்று என நாம் நினைக்கலாம். ஆனால், செல்வம் கொழிக்கும் சிறப்பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளும் பொருட்டு, நாள் முழுவதும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் மக்கள், உன்னதமான "உறவு"-களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நேரம் செலவிடுவதும் இல்லை. அப்படியே நேரம் ஒதுக்கினாலும் அந்த "உறவு" ஆத்மார்த்தமாக உள்ளதா என்பது சந்தேகமே..எனவே, அத்தகைய "உறவு"-களை தேடி செல்லும் மன நிலை இந்த ஹோட்டலை தேர்வு செய்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது?? அதேபோல், என்னதான் பணத்தை இறைத்து சென்றாலும், இந்த ஹோட்டல் அளிக்கும் "சேவை"-யால் உண்மையான அன்பையும், உணர்வையும் பெற்று திருப்திப்பட்டு விட முடியுமா?