தீவிரவாதிகளின் இலக்காக இந்தியா உள்ளது: டொனால்ட் டிரம்ப்!

பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களில், 95 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்களாக உள்ளனர்

சவூதி அரேபியாவில் நடந்த அரபு-இஸ்லாமிய-அமெரிக்க உச்சி மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ‘அமெரிக்காவில் பல தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்திருப்பது போன்று, ஐரோப்பா, ஆப்ரிக்க நாடுகள், தென்னமெரிக்க நாடுகள், இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தீவிரவாத தாக்குதல்களின் இலக்காக உள்ளன’ என்றார்.

அவரது உரையில், “செப்டம்பர் 11 அட்டூழியங்களைத் தொடர்ந்து, அமெரிக்காவில் மீண்டும் பாஸ்டன் குண்டுவீச்சால் பேரழிவை ஏற்படுத்தியதுடன், சான் பெர்னார்ட்டினோ மற்றும் ஆர்லாண்டோவில் நிகழ்த்திய கொடூரமான படுகொலைகளால் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா நாடுகள் கூட சில திகில் அனுபவங்களை சந்தித்துள்ளன.

அரபு, முஸ்லீம், மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இந்த பிராந்தியத்தில் இருந்து தொடங்கிய “மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு பேரழிவு” இப்போது உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் பரவி வருகிறது. தீவிரவாதிகளின் தாக்குதல்களால் அரபு, முஸ்லீம், மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அப்பாவி மக்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. படுகொலைகளின் கொடூரத்தையும், இந்த மோசமான வன்முறை அலைகளில் மோசமான அழிவுகளையும் அவர்கள் அனுபவித்துள்ளனர். பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களில், 95 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்களாக உள்ளனர் என சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன” என்றார்.

இது டொனால்ட் டிரம்ப்பின் முதல் வெளிநாட்டு பயணமாகும். அவருடைய பேச்சு இந்த இரண்டு நாள் பயணத்தின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

×Close
×Close