New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/10/z514.jpg)
ghfghfhf
டவ் சோப் பயன்படுத்தும் கருப்புப் பெண் ஒருவர் வெள்ளையாக மாறுவதைப் போல் ஒரு வீடியோவை டவ் நிறுவனம் பேஸ்புக்கில் வெளியிட்டது.
ghfghfhf
டவ் சோப் பயன்படுத்தும் கருப்புப் பெண் ஒருவர் வெள்ளையாக மாறுவதைப் போல் ஒரு வீடியோவை டவ் நிறுவனம் பேஸ்புக்கில் வெளியிட்டது. இதற்கு, கடும் எதிர்ப்பு எழும்பிய நிலையில், அந்த விளம்பரத்திற்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டிருக்கிறது டவ் நிறுவனம். இவ்வாறு டவ் நிறுவனம் நடந்து கொள்வது இது இரண்டாவது முறையாகும்.
டவ் நிறுவனம் பேஸ்ஃபுக்கில் நேற்றுமுன்தினம் நிற ரீதியான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோவில் ஒரு கருப்பினப் பெண் தன் ஆடையை கழட்டியவுடன், வெள்ளை இனப் பெண்ணாக மாறுவதைப் போல் சித்தரித்திருந்தது. டவ் சோப்பின் விளம்பரத்திற்காக இந்த வீடியோவை அந்த நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இதைத் தனது டிவிட்டர் பக்கத்திலும் ஷேர் செய்திருந்தது.
இதையடுத்து இந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும், நிறவெறியை தூண்டுவது போல் இந்த விளம்பரம் அமைந்துள்ளது எனக் கூறி, கடுமையாக சமூக தளங்களில் விமர்சனம் செய்தனர். உலகின் பல இடங்களில் இருந்து கண்டனங்கள் குவிந்தன.
கருப்பு என்றால் அழுக்கு, வெள்ளை என்றால் சுத்தம் என்பதை இந்த விளம்பரம் மூலம் டவ் நிறுவனம் சொல்ல வருகிறதா? அல்லது கருப்பு நிறத்தோர் இந்த சோப்பை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம் என்கிறதா? என்கிற ரீதியில் பலரும் டவ் நிறுவனத்திற்கு கண்டன போஸ்டர்களை பதிவு செய்தனர். சிலர் இனி டவ் நிறுவனத்தின் பொருட்களை வாங்கப் போவது இல்லை என்றும் கூறினார்.
இந்தப் பிரச்சனை சமூக வலைதளங்களில் பெரும் அளவில் பரவியதை அடுத்து டவ் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கியது. மேலும் தனது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுள்ளது. இனி இது போன்ற தவறுகள் நடக்காது என்றும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது .
இதுபோல் நிற ரீதியான விளம்பரம் ஒன்றை டவ் நிறுவனம் இதற்கு முன்பே ஒருமுறை வெளியிட்டுள்ளது. டவ் சோப் பயனபடுத்திய கறுப்பினப் பெண் , வெள்ளையாக மாறுவதை போல் ஒரு விளம்பரத்தை டவ் நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.