/indian-express-tamil/media/media_files/2025/09/28/h1b-visa-2025-09-28-09-46-30.jpg)
Trump's H-1B visa fee hike impact
Trump's H-1B visa fee hike impact: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நடவடிக்கைகள் பல விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. அந்த வரிசையில், தற்போது H-1பி விசா கட்டணம் உயர்வு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு H-1பி விசா வழங்கப்படுகிறது. ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சிறப்பு பணித் திறன்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும்.
இதன் மூலம் அமெரிக்கா ஓராண்டில் மொத்தம் 85,000 H-1பி விசாக்களை வழங்கி வருகிறது. H-1பி விசா பெற்றவர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் வரை தங்கியிருந்து பணியாற்றலாம். தேவைப்பட்டால், மேலும் 3 ஆண்டுகள் வரை விசா காலத்தை நீட்டிக்க முடியும்.
புள்ளி விவரங்கள் படி அமெரிக்காவில் H-1பி விசாக்களில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்கி உள்ளனர். இந்த விசாவை பெற்றவர்களில் சுமார் 71 சதவீதம் பேர் இந்தியர்கள். இந்நிலையில், சமீபத்தில் அதிபர் டொனாட் டிரம் புதிய H-1பி விசாக்களின் கட்டணத்தை 100,000 டாலராக உயர்த்தினார்.
மேலும், இந்த கட்டண உயர்வு பழைய H-1பி விசாக்கள் வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என்றும் அவர்கள் தங்கள் H-1பி விசாக்களை பழைய கட்டணத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த H-1பி விசா கட்டண உயர்வானது அமெரிக்காவிற்கு பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்த கட்டண உயர்வை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், பொருளாதார வல்லுநர் பீட்டர் ஸ்கிஃப் H-1பி விசா கட்டண உயர்வானது தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டினரை பணியமர்த்துவதைத் தடுக்காது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டிரம்ப்பின் H-1பி விசா கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் தொலைத்தூர பணிகளுக்கு அமெரிக்காவிற்கு வெளியில் இருப்பவர்களை பணியமர்த்துவார்கள்.
தொலைத்தூர பணியாளர்கள் அமெரிக்காவிற்கு வரி செலுத்த மாட்டார்கள். அமெரிக்காவிற்கு பயனளிக்கும் வகையில் தங்கள் வருவாயை செலவிடமாட்டார்கள். இது நடந்தால் அமெரிக்கர்கள் வேலையிழக்க வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
One of the unintended consequences of Trump's $100K fee on H-1B visas is that companies will outsource the work outside of the U.S. Remote workers won't pay U.S. income taxes or spend their earnings in ways that benefit local landlords or other U.S. businesses and their workers.
— Peter Schiff (@PeterSchiff) September 26, 2025
இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருவர் நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் மற்ற நாடுகளில் தொலைவில் இருக்கட்டும். வெளிநாட்டினர் குடும்ப உறுப்பினர்களுடன் அமெரிக்கா வருவதை நாங்கள் விரும்பவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.