/tamil-ie/media/media_files/uploads/2017/08/pri_48575662.jpg)
Agata Ribeiro Coelho clings to her mother Brenda Coelho de Souza, 24, just moments after birth)
பிரேசிலில் பிறந்து சில நிமிடங்களே ஆன குழந்தை, தன் தாயை அணைத்து முத்தமிட்ட சம்பவம், அங்கிருந்தவர்களை அதிர்ச்சியிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
கடந்த ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி, பிரேசிலின் சாண்டா மோனிக்கா மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பெண் ஒருவருக்கு
அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, பிறந்து சில நிமிடங்களில் அக்குழந்தையை தாயிடம் கொடுத்தனர். அப்போது, அங்கிருந்த மருத்துவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், குழந்தை தன் தாயின் கண்ணத்தை அணைத்து முத்தம் கொடுத்தது. இதனால், அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
பிறந்து சில நிமிடங்களிலேயே தன் தாயின் மீதான பிணைப்பை குழந்தை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, அந்த குழந்தையின் தாய் கூறியதாவது, “ என் மகள் முதன்முறையாக என்னைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தது நம்பமுடியாத தருணம். மருத்துவ குழுவினர் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். என்னுடனான என் மகளின் பிணைப்பை அவர்களால் நம்பவே முடியவில்லை. என் மகள் அகட்டா பிறந்து மூன்று மாதங்களாகி விட்டன. ஒவ்வொரு நாளும் ஆச்சரியமிக்கதாக உள்ளது. நான் தாயாக இருப்பதை விரும்புகிறேன்.”, என கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.