Advertisment

பிளேபாய் இதழின் நிறுவனர் ஹூக் ஹெஃப்னர் காலமானார்

தனது 86-வது வயதிலும் தன்னைவிட 60 வயது குறைவான கிறிஸ்டன் ஹாரீஸ் என்பவரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டு ஆச்சரியப்படுத்தினார் ஹூக் ஹெஃப்னர்

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
play boy

உலக புகழ்பெற்ற பிரபல கவர்ச்சி இதழான "பிளேபாய்" இதழின் நிறுவனர் ஹூக் ஹெஃப்னர் காலமானார். வயது முதிர்வின் காரணமாக அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 1926-ஆம் ஆண்டு பிறந்த ஹூக் ஹெஃப்னர், இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது 2 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்தார். பின்னர், கடந்த 1953-ஆம் ஆண்டில் பிளேபாய் இதழை தொடங்கினார்.

உலகளவில் ஆண்களால் அதிகம் வாங்கப்படும் இதழாகக் கருதப்படும் இந்த இதழின் அட்டைப் படங்களுக்கு ஆரம்ப காலங்களில் மிகுந்த வரவேற்பு காணப்பட்டது. இந்த இதழின் அட்டையில், சினிமா, மாடலிங் மற்றும் பாப் பாடகிகளின் கவர்ச்சி படங்கள் இடம் பெறுவது வழக்கம். இதழின் அட்டைப் படங்களில் தங்கள் புகைப்படம் இடம்பெறுவதை பிரபலங்கள் அந்தக் காலத்தில் மிகப் பெரும் கவுரவமாகவே கருதினர்.

இந்த இதழின் முதல் பிரதியின் அட்டைப்படத்தில் இடம்பெற்றவர் மர்லின் மன்றோ. தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் "பிளேபாய்" இதழின் அட்டைப் படத்தில் இடம் பெற்றுள்ளார்.

கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த இதழ், அமெரிக்க சமூகத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து பிளேபாய் அட்டைப் படத்தில் கவர்ச்சி படங்கள் இடம் பெறாது என அதன் நிர்வாகம் அதிரடியாக அறிவித்தது. பிளேபாய் இதழின் அட்டைப் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சனின் கவர்ச்சி படங்கள் கடைசியாக இடம் பெற்றன.

பல்வேறு தடைகளை சந்தித்த போதும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த இந்த இதழ், இணையதளத்தின் கிடுகிடு வளர்ச்சியால் தற்போது விற்பனையில் சரிவை சந்தித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த பிளேபாய் இதழுக்கு இன்றும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் அட்டைப் படத்தில் இடம்பிடிக்க ஏராளமானோர் இன்றளவும் போட்டி போட்டு வருகின்றனர். ஹெஃப்னரை தொடர்ந்து அவரது வாரிசுகள் பிளேபாய் இதழைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

தனது 86-வது வயதிலும் தன்னைவிட 60 வயது குறைவான கிறிஸ்டன் ஹாரீஸ் என்பவரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டு ஆச்சரியப்படுத்தியதுடன் நிஜ வாழ்க்கையிலும் ஒரு பிளேபாயாகவே ஹூக் ஹெஃப்னர் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், பிளேபாய் நிறுவனர் ஹூக் ஹெஃப்னர் வயது முதிர்வு காரணமாக தனது 91-வது வயதில் இன்று காலாமானார். இந்த செய்தியை அவரது மகன் அறிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment