லண்டன் தாக்குதல்: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

லண்டன் ப்ரிட்ச் மற்றும் போரா மார்கெட் பகுதிகளில் நேற்றிரவு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 3-பேரை போலீஸார் சுட்டு வீழ்த்தினர்.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெற்று வருகிறது. லண்டனில் தாக்குதல் நடந்துள்ளதால், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எட்க்பாஸ்டனில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டி இன்று நடைபெறுகிறது.

இதையடுத்து பயங்கரவாத சம்பவம் ஏதும் ஏற்படாமல் இருக்கும் வகையில், அங்கு பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது. லண்டன் ப்ரிட்ச் தாக்குல் சம்பவத்தையடுத்து, இந்திய வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் புதிய நபர்கள், கார்கள் என எதுவும் அனுமதிக்கப்படவில்லை.

இது தொடர்பாக ஐஐசி தெரிவித்துள்ளதாவது: அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைவரின் பாதுகாப்பிற்கும் உறுதியளிக்கும் வகையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close