இந்து கலாச்சாரத்திற்கு மாறிய நேபாள பிரதமர் : மாற்றத்திற்கு காரணம் என்ன?

Nepal PM Oli : நேபாள பிரதமர் கே.பி.ஒலி. சமீபத்தில் கூட கடவுள் ராமர் பிறந்தது இந்தியாவில் உள்ள அயோத்தி இல்லை. நேபாளத்தில் உள்ள அயோத்தியில் தான் ராமர் பிறந்தார்

Nepal PM Oli : இந்தியாவின் மீது எப்போதும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருபவர் நேபாள பிரதமர் கே.பி.ஒலி. சமீபத்தில் கூட கடவுள் ராமர் பிறந்தது இந்தியாவில் உள்ள அயோத்தி இல்லை. நேபாளத்தில் உள்ள அயோத்தியில் தான் ராமர் பிறந்தார். அதலால் ராம கடவுள் எங்களுக்கே சொந்தம் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திளார். மேலும் தான் பதவியேற்ற நாளில் இருந்து அண்டை நாடான சீனாவுடன் சேர்ந்து இந்தியாவை எதிர்க்கும் வகையில் கே.பி ஒலி கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமராக பதவியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சமீபத்தில் கே.பி.ஒலி அதிரடியாக நீக்கப்பட்டார். கொரோனா தொற்று பாதிப்பை சரியாக கையாளவில்லை என்றும், அவரது அரசு பெரும் ஊழலில் ஈடுபட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமரை எதிர்க்கும் கூட்டம் ஒன்று கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நேபாளத்தில் கம்னியூஸ்ட் ஆட்சியை கலைப்பதற்குபு பிரதமர் கே பி ஓலி,திடீர் நடவடிக்கையாக இந்து சடங்குகளை கடைப்பிடிக்கத் தொடங்கினார்.

கோயில்களைத் தவிர்ப்பவர் என்று அறியப்படும் கே.பி ஓலி பல காலக்கட்டங்களில் கடவுள் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். மேலும் கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்றால், அது காரல் மார்க்ஸ் மட்டுமே”. என்றும் தெரிவித்த அவர், கடந்த வாரம் முதல் கோவில்களில் பிரார்த்தனை செய்வதை தீவிரமாக கடைபிடித்து வருகிறார். இதனை உறுதிபடுத்தும் விதமாக கடந்த ஜனவரி 25 ஆம் தேதி, தனது மனைவி ராதிகாவுடன் பசுபதிநாத் கோவிலுக்கு சென்ற ஒலிஅங்கு சுமார் ஒரு மணி நேரம் சிறப்பு பிரார்த்தனை செய்தார். இந்த பிரார்த்தனையின் ஒரு பகுதியாக சுமார் 1,25,000 நெய்  விளக்குகள் ஏற்றப்பட்டது.

மேலும் கடவுளுக்கு திரவ பிரசாதங்களை வழங்குவதற்காக தற்போதுள்ள வெள்ளி ‘ஜலாரி’ க்கு பதிலாக தங்கத்தில் வாங்குவதற்கு (மொத்தம் 108 கிலோ தங்கம்) ரூ .30 கோடி வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பசுபதி பகுதி மேம்பாட்டு அறக்கட்டளையின் (பிஏடிடி) தலைவரான கலாச்சார அமைச்சர் பானு பக்த ஆச்சார்யா தங்கத்தை வாங்க கூடுதலாக 50 கோடி ரூபாய் ஏற்பாடு செய்யுமாறு தனிப்பட்ட முறையில் ஒலியிடம் அறிவுறுத்தியுள்ளார். ஒலி ஆலயத்திற்கு வருகை தந்த மூன்று நாட்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட அறக்கட்டளையின் கூட்டத்தில், ஒரு வாரத்திற்குள் அனைத்து தங்கங்களும் நேபாள ராஷ்டிரா வங்கியில் இருந்து நேரடியாக வாங்கப்படும் என்றும், ஜலாரி கட்டுவதற்கு கைவினைஞர்களுக்கு நேரடியாக பணம் வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து மார்ச் 11 க்குள் கருவறைக்குள் ஜலரியால் அலங்கரிப்பதை பார்க்க ஓலி ஆர்வமாக இருப்பதாகவும், அந்த நாளில் மகாசிவராத்திரி அனுசரிக்கப்படும் என்றும் பிஏடிடி வட்டாரங்கள் தெரிவித்தன.”ஆனால் நேரக் காரணியின் காரணமாக அது சாத்தியமில்லை என்றும், மே 14 க்குள் அதைச் செய்ய நாங்கள்முடிந்தவரை முயற்சிப்போம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் மே 14-ந் தேதி இந்து நாட்காட்டியில் புனிதமாகக் கருதப்படும் அக்ஷயா திரிதியா அனுசரிக்கப்படுகிறது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: International news pm oli turns to hindu rituals for eye on polls

Next Story
இலங்கை ராணுவத் தளபதிகள் மீது பொருளாதார தடை: மைக்கேல் பேச்லெட் பரிந்துரை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com