Advertisment

காலிஸ்தான் புலிப் படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொலை: இந்திய அரசால் தேடப்பட்டவர்

காலிஸ்தான் புலிப் படையின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் உள்ள குருத்வாரா ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காலிஸ்தான் புலிப் படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

காலிஸ்தான் புலிப் படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

குருநானக் சீக்கிய குருத்வாரா சாஹிப்பின் தலைவரும், காலிஸ்தான் புலிப் படையின் தலைவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஞாயிற்றுக்கிழமை மாலை கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாரா சாஹிப் வளாகத்தில் இரண்டு அடையாளம் தெரியாத இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Advertisment

ஜலந்தரில் உள்ள பார் சிங் புரா கிராமத்தைச் சேர்ந்தவர் நிஜ்ஜார் (46). மத்திய அரசின் கூற்றுப்படி, காலிஸ்தான் புலிப் படையின் உறுப்பினர்களை இயக்குதல், நெட்வொர்க்கிங் செய்தல், பயிற்சி செய்தல் மற்றும் நிதியளிப்பதில் நிஜ்ஜார் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பதிவு செய்த வழக்கிலும் அவர் குற்றம் சாட்டப்பட்டார். அவர் நீதிக்கான சீக்கியருடன் தொடர்புடையவர் மற்றும் சமீபத்தில் வாக்களிப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றார்.

விசாரணையில், நிஜ்ஜார் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிட்டது, வெறுப்பூட்டும் பேச்சுகள் மூலம் "கிளர்ச்சி குற்றச்சாட்டுகளை பரப்புவது, சமூக ஊடக தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்தது ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது.

என்.ஐ.ஏவின் கூற்றுப்படி, தேசத்துரோக மற்றும் கிளர்ச்சி குற்றங்களுக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்தது. 2018 ஆம் ஆண்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்த போது, அப்போதைய பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அவரிடம் வழங்கிய தேடப்படும் பட்டியல் நபர்களில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இந்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் கனடா நாட்டில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்தார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இந்து மத போதகரை கொலை செய்ய திட்டமிட்டதாக காலிஸ்தான் புலி படை என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 40 பேரை மத்திய புலனாய்வு அமைப்பு கடந்த ஆண்டு பயங்கரவாதிகளாக அறிவித்தது. இந்த அமைப்பின் தலைவராக ஹர்தீப் சிங் செயல்பட்டு வந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Punjab Canada
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment