அர்ஜெண்டினாவில் பாதி மனித உருவத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டியை கண்ட கிராம மக்கள் அதனை ‘பிசாசு’ எனக்கருதி, அச்சமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், அந்த ஆட்டுக்குட்டி பிறந்த மூன்று மணி நேரத்திலேயே உயிரிழந்து விட்டது.
அர்ஜெண்டினாவின் சான் லூயிஸ் மாகாணத்தை சேர்ந்த கிளாடிஸ் ஓவைடோ என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி ஒன்று, மூன்று குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு ஆட்டுக்குட்டியை பார்த்த கிளாடிஸ் மட்டுமல்லாமல் அங்கிருந்த கிராம மக்கள் அனைவரும் அச்சத்திலும் ஆச்சரியத்திலும் உறைந்தனர்.
ஏனென்றால், அதில் ஒரு ஆட்டுக்குட்டியின் தலை விநோதமாகவும் பாதி மனித உருவத்துடனும் காட்சியளித்தது. பார்ப்பதற்கே விகாரமாகவும், பயங்கரமாகவும் அந்த ஆட்டுக்குட்டி இருந்தது. மேலும், அந்த ஆட்டுக்குட்டியின் கண்கள் வெளியே நீட்டிக்கொண்டு ’பேய்’ போன்று இருந்தது. அதனால், அந்த ஆட்டிக்குட்டியை ’பிசாசு’ எனக்கருதி அந்த கிராமமே அச்சம் அடைந்தது.
இந்நிலையில், அந்த ஆட்டுக்குட்டி பிறந்த மூன்று மணி நேரத்திலேயே இறந்துவிட்டது.
ஆனாலும், அந்த ஆட்டுக்குட்டியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரையும் அச்சப்படுத்தி வருகிறது.
என்ன காரணத்தால் இம்மாதிரி பாதி மனித உருவத்துடன் ஆட்டுக்குட்டி பிறந்தது என்பது இதுவரை தெரியவில்லை.