லண்டன் ரயில் குண்டுவெடிப்பு... ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு!

லண்டன் சுரங்கப்பாதை ரயில் குண்டு வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு

லண்டன் சுரங்கப்பாதை ரயில் குண்டு வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பல்வேறு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற லண்டன் தாக்குல், மான்செஸ்டர் தாக்குதல் ஆகியவற்றிற்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் சுரங்கப்பாதை ரயிலில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. லண்டனில் சுரங்கப்பாதை ரயிலில், நேற்று காலை (உள்ளுர் நேரப்படி) திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்து. ரயிலில் வெள்ளை நிற பக்கெட்டில் இருந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இந்த குண்டுவெடிப்பில் பயணிகள் 29 பேர் தீக்காயம் அடைந்தனர். லண்டனில் ஃபுல்ஹாமில் உள்ள பார்சன் கிரீன் ஸ்டேசன் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. குண்டு வெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த குண்டு அதி தீவிரத்துடன் வெடித்திருந்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என கூறப்படுகிறது. அதி தீரவத்துடன் வெடிக்காததால் பாதிப்பு அதிக அளவில் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றன. லண்டனில் தீவிரவாதிகளால் நடத்தப்படும் 5-வது முக்கிய சம்பவம் இது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். தெரசா மே கூறும்போது, இந்த சம்பவமானது மிக கோழைத்தனமான தாக்குதல் என்று குறிபிட்டுள்ளார்.

×Close
×Close