லண்டனில் சுரங்கப்பாதை ரயிலில் இன்று திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்து. இந்த குண்டுவெடிப்பில் பயணிகள் 22 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் ஃபுல்ஹாமில் உள்ள பெர்சன் கிரீன் ஸ்டேசன் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குண்டு வெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயிலில் இருந்த வெள்ளை நிற பக்கெட்டில் இருந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. லண்டன் நேரப்படி காலையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில், ரயிலில் பயணம் செய்த பயணிகள் 22 பேருக்கு காயம் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/london-explosion-750.jpg)
ரயிலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து, பெர்சன் கிரீன் ஸ்டேசனில் பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இந்த குண்டு வெடிப்பு குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.தீவிரவாத தாக்குதல் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.