மலேசியாவில் வசித்து வந்த தமிழ் வாலிபர் டி.நவீன் என்பவருக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் போல மிகப் பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்பது ஆசை.
இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி, தனது நண்பர் பிரவீன் என்பவருடன் ஒரு பேக்கரியில் ‘பர்கர்’ வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நவீனுக்கு அறிமுகமான 2 வாலிபர்கள், நவீனையும் பிரவீனையும் கிண்டல் செய்துள்ளனர். இதில் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
அந்த இரண்டு வாலிபர்களுடன் மேலும் மூன்று வாலிபர்கள் சேர்ந்து நவீனையும், பிரவீனையும் ஹெல்மெட்டுகளால் கடுமையாக தாக்கத் தொடங்கினர். இதில் பிரவீன் தப்பித்து ஓடி விட, நவீன் அவர்களிடம் சிக்கிக் கொண்டார். அவர்கள் நவீனை விடாமல் தாக்கி, அவருடன் தகாத முறையில் உறவு கொண்டு, பின்புறத்தை தீயால் சுட்டு சித்ரவதை செய்தனர்.
இதனால், படுகாயம் அடைந்த நவீன், அங்கிருந்து மீட்கப்பட்டு ஜார்ஜ் டவுன் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நவீன் மீது தாக்குதல் நடத்திய ஐந்து பேரும், அவருடன் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தவர்கள் என தெரிகிறது. இச்சம்பவம் அங்கு வாழ்கின்ற தமிழ் மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, மருத்துவமனையில் நவீன் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஏ.ஆர்.ரஹ்மானே தனது ட்விட்டரில், “நவீன் விரைவில் குணமடைய பிராத்தனை செய்கிறேன்” என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Dear Nhaveen, prayers & love for a speedy recovery. Let all acts of savagery end & people come to senses..Peace!https://t.co/sEhXzcHfBM
— A.R.Rahman (@arrahman) 15 June 2017
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Malaysian tamil youth who wants to become ar rahman was brutally attacked and died
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டணிக் கட்சிகளை நிர்பந்திக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
குக்கரும் வேணாம்… வடிக்கவும் வேணாம்: பேச்சிலர்கள் இப்படி சாதம் செய்து பாருங்க!
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : உங்கள் பெயரை சரிபார்க்க வேண்டுமா?
அட! நம்ம சசிகுமாரா இது? சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் மாஸ் லுக்
ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!